GOAT Negative Review: அப்செட்.. மத்த நடிகர்களின் ரசிகர்களை சந்தோஷப்படுத்த விஜய் ரசிகர்கள் பலிகிடாவா?

சென்னை: நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் தி கோட். இந்தப் படத்தில் விஜய்யுடன் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் படத்தினைத் தயாரித்துள்ளது. படம் தமிழ்நாட்டில் சோலோவாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என மொத்தம் 5 மொழிகளில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் கிட்டத்த ரூபாய் 400 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படம் பார்த்த ரசிகர்களில் ஒரு பகுதியினர் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கூறியுள்ளனர். இது தொடர்பாக விரிவாக காணலாம்.

goat goat negative review vijay

ரசிகர் ஒருவர் கூறும்போது, படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. படத்தின் கதைக்கு தேவையில்லாத காட்சிகள் படத்தில் அதிகம் உள்ளது. படம் முழுக்க சண்டைக் காட்சிகள்தான் உள்ளது. ஆனால் படத்தின் கதைக்கு அது தேவையில்லை. படக்குழுவினர் கொடுத்த ஹைப்புக்கு படம் இல்லை எனக் கூறியுள்ளார்.

goat goat negative review vijay

போரட்டிக்கும் விஷயம்: மற்றொருவர் கூறும்போது, ஒருமுறை இந்தப் படத்தைப் பார்க்கலாம். அதுவும் விஜய்க்காக பார்க்கலாம். சில காட்சிகள் படத்தின் கதையோட்டத்தில் இருந்து வெளியேறி, மீண்டும் கதைக்குள் வருகின்றது. இது படத்தில் போரடிக்கும் விஷயமாக உள்ளது. சண்டைக் காட்சிகளை மட்டுமே வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர். ஆனால், படத்தின் கதை சுமாரான கதை எனக் கூறியுள்ளார்.

goat goat negative review vijay

மற்ற ரசிகர்கள்: அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, மற்ற நடிகர்களின் ரசிகர்களை சந்தோஷப்படுத்த, பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவையெல்லாம் படத்திற்கு தேவையில்லாத காட்சிகள். இப்படியான காட்சிகள் மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் திருப்தியாக இருக்கலாம், ஆனால் விஜய்க்கு இருக்கும் மாஸ்க்கு ஏற்ற காட்சிகள் படத்தில் இல்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

goat goat negative review vijay

தேவையில்லாத ஆணி: அதேபோல் ரசிகர்கள் ஸ்பார்க் பாடல் தேவையில்லாத ஆணி எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருபுறம் ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வந்தாலும் விஜய் ரசிகர்கள் மத்தியிலேயே இந்தப் படத்திற்கு சுமாரான விமர்சனம் கிடைத்துள்ளது என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

goat goat negative review vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X