GOAT Public Review: தளபதி vs இளைய தளபதி.. விஜய்க்கு செம ஃபேர்வெல்! வெங்கட் பிரபு சம்பவம்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் விஜய்யின் 68வது படமாகும். விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதால், இந்தப் படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தினை விஜய்யின் அனைத்து தரப்பு ஆடியன்ஸும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களிலும் படத்தினை ரிலீஸ் செய்துள்ளார்.
கேரளாவில் படத்தினை அதிகாலை 4 மணிக்கு பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கின்றது என்பது குறித்து பேசியுள்ளனர். தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்காததால், விஜய்யின் தீவிரமான ரசிகர்கள் கேரளாவிற்கு புறப்பட்டுச் சென்று படம் பார்த்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் படத்தின் முதல் பாதி எப்படி இருக்கின்றது என்பது குறித்து பேசியுள்ளனர். அது குறித்து பார்க்கலாம்.

ரசிகர் ஒருவர் பேசுகையில், படத்தின் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக உள்ளது. படத்தில் விஜய் நெகடிவ் கதாபாத்திரத்திலும் பாசிடிவ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு படத்தினை சிறப்பாக செதுக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் மாஸாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். வெங்கட் பிரபு விஜய்க்கு சிறப்பான ஃபேர்வெல் கொடுத்துள்ளார்.

தளபதி vs இளைய தளபதி: மற்றொரு ரசிகர் கூறும்போது, படம் தளபதி vs இளைய தளபதிதான். சீனுக்கு சீன் சண்டைக் காட்சிகள்தான். படம் தரமா இருக்கு. மிகவும் விறுவிறுப்பாக படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. இடைவேளைக் காட்சியெல்லாம் புல்லரிக்கின்றது. படம் பார்க்க நான் மதுரையில் இருந்து வந்துள்ளேன். படம் மிகச் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் வெங்கட் பிரபு ட்விஸ்ட் வைத்துக் கொண்டே உள்ளார்.

மங்காத்தா: படம் எதிர்பார்த்ததை விட சூப்பராக உள்ளது. கதையை இதுதான் என யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை அமைத்துள்ளார் வெங்கட் பிரபு. அவர் மேலும் மேலும் வளரவேண்டும். மங்காத்தா படத்தை விட 1000 மடங்கு படம் சிறப்பாக உள்ளது. வெங்கட் பிரபு செஞ்சுட்டாப்புள எனக் கூறியுள்ளார்.

வசூல் சாதனை: படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கின்றது. கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியும் தரமாகவும் சிறப்பாகவும் உள்ளது. விஜய் அரசியலுக்குச் சென்றாலும் ஆண்டுக்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் என ரசிகர் ஒருவர் பேசினார்.


Click it and Unblock the Notifications











