GOAT: கோட் படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்.. தலைவர் ரியாக்‌ஷன் இதுவா? கோர்த்து விடும் ப்ளூ சட்டை!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவான அவரது 68வது படமான தி கோட் படம் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ். எண்டர்டைமெண்ட் நிறுவனம் படத்தினைத் தயாரித்துள்ளது. படம் தமிழ்நாட்டில் சோலோவாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என மொத்தம் 5 மொழிகளில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் கிட்டத்தட்ட ரூபாய் 400 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகாலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டினைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகாலை 4 மணிக் காட்சிகளுக்கும் 6 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரசிகர்கள் பயணம் செய்து படம் பார்த்தனர். இந்நிலையில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் உள்ள தளபதி ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

goat vijay rajinikanth

மேலும் படம் தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1100 திரையரங்குகளில் வெளியாகின்றது. இதில் மல்டி ஸ்கீரீன் திரையரங்குகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கோட் படம் திரையிடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்ககளுக்குமேல் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் படம் இந்தியா முழுவதும் முதல் நாளிலேயே பல கோடிகளை வசூல் செய்யும் என்பது ரிலீஸ்க்கு முன்னதாகவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

goat vijay rajinikanth

சிறப்புக் காட்சிகள்: இப்படியான நிலையில் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர். பல தீவிரமான ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு பயணம் செய்து, அங்கு தங்கி அதிகாலை 4 மணிக் காட்சியையும், 6 மணிக் காட்சியையும் பார்த்தனர். படம் பார்த்த விஜய் ரசிகர்கள் படத்தினை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய்யை மீண்டும் நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்த்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி வருகின்றனர்.

தலைவர் ரியாக்‌ஷன்: இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தைக் குறிப்பிட்டு கோட் படத்திற்கு தொடர்ந்து பாசிடிவ் ரெஸ்பான்ஸ் வந்து கொண்டு இருப்பதால் அவரது ரியாக்‌ஷன் குறித்து பதிவிட்டுள்ளார். கோட் படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் வந்து கொண்டு இருப்பது தொடர்பான தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டதும், அவர் தனது காதுகளை மூடிக்கொள்வதைப் போன்ற ஒரு டெம்ப்ளேட்டை பகிர்ந்து தலைவர் ரியாக்‌ஷன் என குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

goat vijay rajinikanth

பனிப்போர்: ஏற்கனவே நடிகர் விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு இடையில் பனிப்போர் நடந்து கொண்டு இருப்பதாக திரைத்துறையில் பேச்சுகள் உள்ளது. ஜெய்லர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யைத் தாக்கி ரஜினி மறைமுகமாக பேசியதாக கூறப்பட்டது. அதேபோல் லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு, ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமான இருந்தது. இப்படியான நிலையில், விஜய் படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைப்பதைப் பார்த்து ரஜினிகாந்த் அதிருப்தி அடைவதைப் போன்ற ரியாக்‌ஷன் டெம்ளேட் விஜய் மற்றும் ரஜினியிடையே வேண்டுமென்றே பிரச்னையை கோர்த்துவிடும் செயல் எனவும் பலர் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X