GOAT: கோட் படத்தில் காந்தியாக வரும் தளபதி.. அப்போ இளைய தளபதியின் பெயர் இதுவா? செம பெர்ஃபெக்ட் போங்க!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் விஜய்யின் 68வது படமாகும். விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதால், இந்தப் படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தினை விஜய்யின் அனைத்து தரப்பு ஆடியன்ஸும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களிலும் படத்தினை ரிலீஸ் செய்ய பெரும் சிரத்தை எடுத்துள்ளார்.

படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த பாடகி பவதாரிணி குரல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர் குரலில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் மட்ட பாடலுக்கு நடிகை த்ரிஷா நடனமாடியுள்ளார்.

GOAT Ilaya Thalapathy Name Thalapathy Vijay

படத்தில் தளபதியின் பெயர் காந்தி என்பது, படத்தின் ட்ரைலரிலேயே கூறப்பட்டது. ஆனால் படத்தில் உள்ள டீ ஏஜிங் செய்யப்பட்ட விஜய்யின் பெயர் அதாவது இளைய தளபதியின் பெயர் என்ன என்ற கேள்வி படக்குழுவிடம் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறப்பட்டது.

goat ilaya thalapathy name thalapathy vijay

திருப்தி: தொடக்கத்தில் படத்தில் இடம் பெற்ற பாடலில் டீ ஏஜிங் செய்யப்பட்ட விஜய் குறித்து பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். இதனால் படக்குழு மீண்டும் விஜய்யின் உருவத்தினை மாற்றிகொடுத்தது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேபோல் படத்தில் இருந்து வெளியிடப்பட்ட முதல் பாடலுக்கும் கலவையான விமர்சனங்கள் வந்தது. இதனால் பாடலின் பீட் ரேட்டை அதிகரித்து படத்தில் பாடலை காட்சிப் படுத்தியுள்ளனர்.

GOAT Ilaya Thalapathy Name Thalapathy Vijay

த்ரிஷா: படக்குழுவினர் தொடர்ந்து சர்ப்ரைஸாக வைத்து வந்த பல விஷயங்கள் திரையரங்கில் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக டீ - ஏஜிங் செய்யப்பட்ட விஜய்க்கு சூட்டப்பட்ட பெயர். கோட் படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடியது மற்றும் பல ட்விஸ்ட்டுகளை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக மட்ட பாடலுக்கு த்ரிஷா நடனமாடும் காட்சிகளுக்கு திரையரங்கமே ஆடியது.

GOAT Ilaya Thalapathy Name Thalapathy Vijay

இளைய தளபதி பெயர்: அதேபோல் படத்தின் கதை குறித்து ரசிகர்கள் கூறும்போது, ஒரு அப்பா தன் மகனை எப்படி நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதுதான் கதை எனக் கூறினார். மேலும் டீ - ஏஜிங் செய்யப்பட்ட விஜய் கதாபாத்திரத்திற்கு சஞ்சய் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியரின் முதல் மகனின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சங்கீதா மற்றும் விஜய் ஆகிய பெயர்களை இணைத்து இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

goat ilaya thalapathy name thalapathy vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X