GOAT Review: மங்காத்தாவை விட 1000 மடங்கு! கேரளா கர்நாடகா ஆந்திரா என ஆல் ஏரியா தளபதி ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவான அவரது 68வது படமான தி கோட் படம் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ். எண்டர்டைமெண்ட் நிறுவனம் படத்தினைத் தயாரித்துள்ளது. படம் தமிழ்நாட்டில் சோலோவாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என மொத்தம் 5 மொழிகளில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் கிட்டத்தட்ட ரூபாய் 400 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகாலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டினைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கும் 6 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரசிகர்கள் பயணம் செய்து படம் பார்த்தனர். இந்நிலையில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் உள்ள தளபதி ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

படம் வேற லெவலில் உள்ளது. படத்தில் எண்டர்டைமெண்டுக்கான அனைத்தும் உள்ளது. காமெடி, டான்ஸ், சண்டைக் காட்சிகள் என எல்லாம் உள்ளது. குடும்பத்துடன் படத்தைப் பார்க்கலாம். படம் அந்த அளவிற்கு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மகனை ஒரு அப்பா எப்படி வளர்க்க வேண்டும் என்பதுதான் கதையே. அதனை ஹாலிவுட் ரேஞ்சுக்கு திரைக்கதை அமைத்து மிரட்டிவிட்டுள்ளார் வெங்கட் பிரபு. பாடல்கள் ஒவ்வொன்றும் ஸ்கீரின் வரும்போது தரமாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் என ஒரு ரசிகர் கூறுகின்றார்.

வசூல் சாதனை: மற்றொரு ரசிகர் பேசுகையில், படம் கண்டிப்பா ப்ளாக் பஸ்டர் ஹிட்தான். விஜய்யின் மற்ற படங்களை விடவும் இந்தப் படம் சூப்பராக உள்ளது. படம் வசூலில் மாபெரும் சாதனை படைக்கும். தளபதி சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக மகன் கதாபாத்திரமான சஞ்சய் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். அது ரசிக்கும்படியாக உள்ளது என கூறினார்.

நெகடிவ் கதாபாத்திரம்: அதேபோல் கேரளாவில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் கூறும்போது, படம் மங்காத்தா படத்தைவிட 1000 மடங்கு நன்றாக இருக்கின்றது. தளபதி விஜய் நெகடிவ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். மிகவும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தளபதியை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்க்கின்றோம். கடைசியாக அழகிய தமிழ் மகனில் பார்த்தது. படம் வேற லெவலில் இருக்கு. அனைவரும் பார்க்கலாம் எனக் கூறினார்.

பாடல்கள் ஹிட்: படம் நினைத்ததைவிடவும் சிறப்பாக உள்ளது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல், கர்நாடகாவில் வந்து படம் பார்க்கின்றோம் என்ற எண்ணம் தோன்றவேயில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் தளபதியை கர்நாடகா ரசிகர்கள் கொண்டாடுவதைப் பார்க்கும்போது மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. பாடல்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது. பாடல்கள் தொடக்கத்தில் கேட்பதற்கு ஒருமாதிரியான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படத்தில் பார்க்கும்போது பாடல் காட்சிகள் சிறப்பாக உள்ளது. வெங்கட் பிரபுவுக்கு நன்றி. தளபதிக்கு சிறப்பான ஃபேர்வெல் படத்தைக் கொடுத்ததற்கு என ஒருவர் பேசியுள்ளார்.

வருத்தம்: தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்குச் சென்று படம் பார்த்த தளபதி ரசிகர்கள் கூறும்போது, தமிழ்நாட்டில் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி இல்லையே என்ற வருத்தம் உள்ளது. அடுத்த படமான தளபதியின் கடைசிப் படத்திற்கு ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, அதிகாலை காட்சிக்கு அனுமதி கொடுக்கவேண்டும் எனவும் கேடுக்கொண்டனர்.


Click it and Unblock the Notifications











