GOAT: ஓவர் பில்டப்.. ரத்தக் கண்ணீர் வடிக்கும் லண்டன் ரசிகர்கள் புலம்பல்.. கோட் படத்துல எது பிரச்னை?

சென்னை: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறி வருகின்றனர். ஒருபுறம் தமிழ்நாடு ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வந்தாலும், லண்டனில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு படம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.

படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1100 திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆனது. படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். விஜய் உடன் பெரிய நடிகர்கள் பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக, பிரசாந்த், பிரபுதேவா, ஜெய்ராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

goat vijay goat movie review

த்ரிஷா மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேபோல், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் காட்சிகள், தோனி எண்ட்ரி என படம் முழுவதும் பல சர்ப்ரைஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

படத்தினைப் பார்த்த லண்டன் ரசிகர்களில் ஒரு பகுதியினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது ரசிகர் ஒருவர் பேசுகையில், " தயவு செய்து படத்திற்கு யாரும் வந்து விடாதீர்கள். ரொம்பவும் எதிர்பார்ப்போடு படம் பார்க்க வந்தோம். ஆனால் படம் அந்த அளவுக்கு இல்லை. ரொம்பவும் கஷ்டத்துடன் தியேட்டரை விட்டு வெளியே வந்துள்ளேன். படம், படக்குழுவினர் கொடுத்த பில்டப் அளவிற்கு படம் இல்லை" எனக் கூறியுள்ளார்.

goat vijay goat movie review

இப்படி ஒரு படம் தேவையா?: அதேபோல் மற்றொருவர் கூறும்போது, " படம் மங்காத்தா அளவிற்கு இல்லை. நாங்கள் மங்காத்தாவை விட எதிர்பார்த்தோம். ஆனால் படம் அந்த அளவிற்கு இல்லை. தளபதி ரசிகராக எங்களுக்கு வருத்தமாக உள்ளது. மற்ற விஜய் ரசிகர்களிடமும் கேட்டுப் பாருங்கள் படம் எப்படி உள்ளது என, அவர்கள் கூறுவார்கள் படம் சுமார்தான்" எனக் கூறுகின்றார்.

goat vijay goat movie review

அதேபோல் மற்றொருவர் படம் குறித்து கூறுகையில், " தலைவர் விஜய் தேர்தலில் நிற்கும் நேரத்தில் விஜய்யை வில்லன் கதாபாத்திரம் செய்ய வெச்சுட்டாரு. ரொம்ப வருத்தமா இருக்கு. படம் நல்ல படம்தான், விஜய் தேர்தலில் நிற்கும் நேரத்தில் இந்தமாதிரியான படம் தேவையில்லாத படம்" என கூறியுள்ளார்.

goat vijay goat movie review

போரடிக்குது: மற்றொருவர் கூறுகையில், "படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. சுமாராகத்தான் உள்ளது. இப்படி ஒரு படம் எடுக்கவே கூடாது. இதுபோன்ற படங்களால், அப்பா மகன் உறவு கெட்டுப்போகும். விஜய் இதுபோன்ற கதைகளில் நடித்திருக்ககூடாது. படம் நினைத்த அளவிற்கு எண்டர்டைமெண்ட் செய்யவில்லை. ரொம்பவும் போர் அடிக்குது. வெங்கட் பிரபு படம் போலவே இந்தப் படம் இல்லை. வெங்கட் பிரபு ஏற்கவே இயக்கிய பிரியாணி படத்தைவிட மோசமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

goat vijay goat movie review

வசூல்: தமிழ்நாடு ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடிவரும் நிலையில், லண்டன் ரசிகர்கள் படத்திற்கு அதிருப்தியான விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 45 கோடிகளை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

goat vijay goat movie review

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X