GOAT: மகனைக் கொல்லும் அப்பா.. தமன்னா த்ரிஷா டேன்ஸ்.. ஜெய்லர் படத்தின் திரைக்கதையின் காப்பியா கோட்?
சென்னை: தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் படம் என்றால் அது தி கோட். இந்தப் படம் நேற்று முன்தினம் அதாவது, செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக ரிலீஸ் ஆனது. இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படம் முதல் நாளில், ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

படம் ஒருபுறம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தாலும் மறுபுறம் ரசிகர்கள் மிகவும் போர் அடிப்பதாக புலம்பி வருகின்றனர். இப்படியான நிலையில் கோட் படத்தின் திரைக்கதை கிட்டத்தட்ட ஜெயிலர் படத்தினைப் போல் உருவாக்கப்பட்டுள்ளதாக பேச்சுகள் எழுந்து வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

அதாவது ஜெய்லர் படத்தின் கதை மற்றும் திரைக்கதையின்படி அப்பா கதாபாத்திரம் நேர்மையான அதிகாரி கதாபாத்திரம். ஆனால் மகன் கதாபாத்திரம் முற்றிலும் அப்பாவின் கதாபாத்திரத்திற்கு எதிரானது. அதேபோல்தான் கோட் படத்தின் அப்பா கதாபாத்திரம் மிகவும் நேர்மையான கதாபாத்திரமாகவும், மகன் கதாபாத்திரம் அப்பாவின் கதாபாத்திரத்திற்கு நேர் எதிரான கதாபாத்திரமாகவும் உள்ளது. ஜெய்லரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய்லராக நடித்திருப்பார், கோட் படத்தில் விஜய் SAT பிரிவில் பணியாற்றுகின்றார்.

அப்பா - மகன்: அதேபோல், ஜெயிலர் படத்தில் அப்பாவைக் கொல்ல, மெயின் வில்லன் வர்மா கதாபாத்திரத்துடன் இணைந்து அப்பாவைக் கொல்ல முயற்சி செய்யும். ஜெயிலர் படத்தைப் போலவே, கோட் படத்திலும் தனது அப்பாவைக் கொல்ல, மெயின் வில்லனான மேனன் கதாபாத்திரத்துடன் இணைந்து விஜய்யைக் கொல்ல முயற்சி செய்கின்றார். ஜெயிலர் படத்தின் க்ளைமேக்ஸில் அப்பாவே மகனைக் கொன்றுவிடுவார், அதேபோல், கோட் படத்திலும் காந்தி கதாபாத்திரம் ஜீவன் கதாபாத்திரத்தைக் கொன்றுவிடுகின்றார்.

தமன்னா - த்ரிஷா: ஜெய்லர் படத்தின் காவாலா பாடலுக்கு தமன்னா நடனமாடி இருப்பார். அதேபோல் கோட் படத்தின் மட்ட பாடலுக்கு விஜய்யுடன் த்ரிஷா நடனமாடியுள்ளார். மோகன் லால், சிவராஜ் குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியின் நண்பர்களாக நடித்திருப்பார்களாக நடித்திருந்தாலும் படத்தில் இவர்கள் அனைவரும் சிறிய கேமியோ கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளனர். அதேபோல் கோட் படத்தில் விஜய்யின் நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் க்ளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படியான புள்ளிகள் படத்தில் ஒரே மாதிரி இருப்பதால் இரண்டு படங்களின் திரைக்கதையும் ஒன்றுதான் என்ற பேச்சு இயல்பாகவே எழுந்து விடுகின்றது. இதுமட்டும் இல்லாமல் ரஜினிக்கு ஜெயிலரில் வைக்கப்பட்டுள்ள பில்டப் காட்சிகளைப் போல் கோட் படத்தில் விஜய்க்கு பில்டப் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

பனிப்போர்: கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கும் தளபதி விஜய்க்கும் இடையில் கிட்டத்தட்ட ஒரு பனிப்போரே நடந்து வருகின்றது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின்போது சூப்பர் ஸ்டார் பேசியதற்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்தது விஜய்யின் பேச்சு. இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள, கோட் படத்தின் திரைக்கதை கிட்டத்தட்ட ஜெயிலர் படத்தின் திரைக்கதையைப் போல் இருப்பது பேசுபொருளாகியுள்ளது.



Click it and Unblock the Notifications











