GOAT Trailer: ரியல் டைமில் ஒரு மில்லியன்.. இணையத்தை அலறவிட்ட தளபதி ரசிகர்கள்.. கோட் ட்ரைலர் சாதனை

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தினை அர்ச்சனா கல்பாத்தியின் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரைலர் ரிலீஸ் ஆகிய சில நிமிடங்களில் படத்தின் ட்ரைலை யூடியூப் தளத்தில் ரியல் டைமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

திகோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக விஜய் படத்தில் இருந்தும் வெங்கட் பிரபு படத்தில் இருந்தும் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மங்காத்தா படத்தில் இடம் பெற்றுள்ள அஜித் பேசும் வசனமான, சத்தியமா இனிமேல் குடிக்கவே மாட்டேன் எனும் டையலாக்கை அஜித் ரசிகர்களுமே கொண்டாடி வருகின்றனர்.

GOAT GOAT Trailer Vijay

ட்ரைலரைப் பார்த்த ரசிகர்கள் படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கப்போவதாக கூறி வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், வெங்கட் பிரபுவையும் கொண்டாடி வருகின்றனர். கோட் படத்தில் நடித்துள்ள விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, காளிதாஸ், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

ட்ரைலர் ரிலீஸ்: இந்நிலையில் வழக்காமாக விஜய் படத்தின் அப்டேட்கள் ரிலீஸ் ஆனாலே தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை படைக்கும். இப்படியான நிலையில், தி கோட் படத்தின் ட்ரைலரும் தரமான சாதனையைப் படைத்துள்ளது. மேலும் இந்த சாதனை இதுவரை தமிழ் சினிமாவில் மற்ற படங்களின் ட்ரைலரோ அல்லது அப்டேட்டுகளோ படைக்காத சாதனை.

புதிய சாதனை: அதாவது படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆன சில நிமிடங்களிலேயே யூட்டூப் தளத்தின் ரியல் டைமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதாவது படத்தின் ட்ரைலரை ஒரேநேரத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X