GOAT Trailer: தி கோட் ட்ரைலர் அறிவிப்பு ஒவ்வொன்னும் அதிருதே! தளபதி வெறியர்களே இத பாருங்க!
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தினை அர்ச்சனா கல்பாத்தியின் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில் இருந்து ஏற்கனவே அறிவிப்புகள் வெளியான நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 14ஆம் தேதி படக்குழு தரப்பில் இருந்து புது போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த போஸ்டரில் கோட் படத்தில் நடித்துள்ள விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, காளிதாஸ் வைபவ் உள்ளிட்டோர் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் அதனை கொண்டாடினர். இந்த போஸ்டரை அர்ச்சனா கல்பாத்தி ரிலீஸ் செய்திருந்தார்.

அதன் பின்னர் படத்தின் இயக்குநர் வெங்கர் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் படத்தின் ட்ரைலர் அப்டேட் நிச்சயம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் ட்ரைலர், ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. விஜய் சினிமாத்துறையில் இருந்து விலகவுள்ளதால் இந்தப் படத்தின் ஒவ்வொரு அறிவிப்பின் மீதும் ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ: இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து புதிய வீடியோ ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று மாலை 5 மணிக்கு ட்ரைலர் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று படக்குழு தரப்பில் இருந்து புது போஸ்டர் வெளியிடப்பட்டது. ட்ரைலர் அறிவிப்பிற்காக படக்குழு வெளியிட்ட இரண்டு போஸ்டர்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ 26 நொடிகள் இருப்பதால் ரசிகர்கள் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைக்கவும், இன்ஸ்டாவில் பகிரவும் ஏதுவாக இருக்க படக்குழு இதனை வெளியிட்டு ரசிகர்களையும் ட்ரைலர் ரிலீஸில் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.
கதை : தி கோட் படத்தின் கதை என்பது கற்பனைக் கதைதான் என்றாலும் உண்மைக்கு நெருக்கமாக இந்த கதையை படமாக்கி இருக்கின்றோம். RAW அமைப்புடன் இணைந்து வேலை செய்யும் குழுவின் பெயர் SATS. இந்த குழுவில் இருந்த அனைவரும் ஒரு காலத்துல மிகவும் துணிச்சலாக செய்த செயல் ஒன்று இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக அவர்களுக்கு எதிராக மாறி நிற்கின்றது. இந்த பிரச்னையை அவர்கள் எப்படி எதிர்கொண்டு வெல்கின்றார்கள் என்பதுதான் படத்தின் மைய்யக்கதை. படம் முழுக்க ஆக்ஷன்தான். தளபதி விஜய் ரசிகர்கள், தளபதியை எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என நினைத்தார்களோ அவை அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கும். ரசிகர்களுக்கு படத்தில் பல சஸ்பென்ஸ் காத்திருக்கு. படத்துக்குள்ள வந்துட்டாலே ரசிகர்களுக்கு திருவிழாதான்" என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











