விஜய் 66 படத்தை இயக்க இருக்காரு தோழா புகழ் இயக்குநர் வம்சி... உறுதிப்படுத்திய இயக்குநர்

ஐதராபாத் : இயக்குநர் நெல்சன் திலீப்குமார் டைரக்ஷனில் தற்போது விஜய் 65 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

கொரொனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது அடுத்த படத்தை தோழா புகழ் வம்சி படிப்பள்ளி இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கம்

நெல்சன் திலீப்குமார் இயக்கம்


மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய் 65 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள சூழலில் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வம்சி படிப்பள்ளி தகவல்

வம்சி படிப்பள்ளி தகவல்

விஜய்யின் அடுத்த படம் குறித்து கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் தற்போது விஜய் 66 படம் குறித்த தகவலை தோழா, மகரிஷி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற வம்சி படிப்பள்ளி தெலுங்கு மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கில் உருவாக்கம்

தமிழ், தெலுங்கில் உருவாக்கம்

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படத்தை தான் இயக்கவுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது படங்களிலேயே மிகுந்த பொருட்செலவில் இந்த படம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொரோனா தாக்கம் ஓரளவிற்கு குறைந்தவுடன் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் வெளியானவுடனேயே விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த விஷயத்தை கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த ஆண்டில் வெளியீடு

அடுத்த ஆண்டில் வெளியீடு

இதனிடையே, தற்போது முதல்கட்ட சூட்டிங் முடிந்துள்ள விஜய் 65 படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கப்பட்டு, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X