Vijay: யூடியூப்பில் திணறும் தவெக கொடி பாடல்.. சொந்த ரசிகர்களாலேயே கைவிடப்பட்டாரா தலைவர் விஜய்?

சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். மேலும் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக கூறினார். இது திரைத்துறையினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் நேற்று அதாவது, ஆகஸ்ட் 22ஆம் தேதி தவெக கட்சியின் கொடி மற்றும் கொடி பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் அந்த கொடி பாடலை இதுவரை எத்தனைப் பேர் பார்த்துள்ளனர் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நேற்றைய தினம் விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இதில் கொடியில் இரண்டு யானைகளும் ஒரு வாகைப் பூவும் இடம் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், கொடியில் 28 நட்சத்திரங்களும் உள்ளது. இதில் ஐந்து நட்சத்திரங்கள் நீல நிறத்திலும், 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும் உள்ளது. கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொடியை அறிமுகம் செய்து வைத்த கையோடு, பனையூர் அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தனது கட்சிக் கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.

Vijay TVK Flag TVK Flag Song

அதேபோல் கொடி பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். அந்த கொடி பாடலை, பாடல் ரிலீஸ் செய்யப்பட்டு 22 மணி நேரத்தில் 28 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது விஜய்க்கு மட்டும் இல்லாமல் தவெக கட்சி நிர்வாகிகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து வெளியாகவுள்ள படம் தி கோட். இந்தப் படத்தின் ட்ரைலர் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் செய்யப்பட்டது. அதனை இதுவரை 44 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

Vijay TVK Flag TVK Flag Song

28 லட்சம்: அதேபோல் யூடியூப்பில் விஜய் பாடல் ரிலீஸ் ஆகின்றது என்றாலே, ரசிகர்கள் யூடியூப் தளமே ஸ்தம்பித்துப் போகும் அளவிற்கு பாடலை ட்ரெண்ட் செய்து விடுவார்கள். அப்படி இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பாடலை இதுவரை அவரது ரசிகர்களே பார்க்கவில்லை என்பது விஜய்க்கு மட்டும் இல்லாமல், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டும் இல்லாமல், பாடலை இதுவரை 28 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijay TVK Flag TVK Flag Song

கேள்வி: இந்த விபரத்தை அறிந்த சிலர், பாடலே ட்ரெண்ட் ஆகல, அவரோட ரசிகர்களே அவரோட கட்சிப் பாடல பார்க்கல, இதுல அவங்க ஓட்டு போடுவாங்கனு எப்படி நம்புவது என பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இந்த கேள்வியை அறிந்த சில நிர்வாகிகள் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் இருக்கின்றனர்.

Vijay TVK Flag TVK Flag Song

நம்பிக்கை: அதேநேரத்தில், விஜய் ரசிகர்கள் அனைவரும் விஜய் கட்சியில் இணைந்து செயல்படுவார்கள் என்ற எண்ணத்தில் விஜய், அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை. மாறாக எல்லாப் பணிகளையும் தானே முன் நின்று செய்து கட்சியை வலுப்படுத்தவே அவர் விரும்புகின்றார். அதனால்தான் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து முழுவதுமாக விலகுகின்றார் எனவும் ஒரு சில நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது திரைத்துறையில் மட்டும் இல்லாமல், அரசியல் தளத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X