தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!

சென்னை: தளபதி விஜய் சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!

கொரோனா காலத்தில் தியேட்டரில் படங்களை ரிலீஸ் செய்யவே பல முன்னணி நடிகர்கள் யோசித்து வரும் நிலையில், ரசிகர்களுக்காக தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்தார் நடிகர் விஜய்.

விஜய் தியேட்டருக்கு வந்து பார்ப்பாரா என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு தனது ஸ்டைலில் பதில் சொல்லும் விதமாகவே இந்த வீடியோ அமைந்துள்ளது.

தியேட்டரில் தளபதி

மாஸ்டர் படத்தின் முதல் ஷோவை சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் நடிகர் விஜய் பார்த்துள்ளார். அதற்கு ஆதாரமான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகின்றன. ஜனவரி 13ம் தேதி காலை 7 மணிக்கு மாஸ்டர் படத்தை விஜய் தியேட்டரில் பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.

தொப்பி, மாஸ்க்

தொப்பி, மாஸ்க்

ரசிகர்களுடன் அமர்ந்து தளபதி விஜய் படத்தை பார்த்தால், அதன் பின்னர் ரசிகர்கள் யாரும் மாஸ்டர் படத்தை பார்க்க மாட்டார்கள், தளபதி விஜய்யை சுற்றி மொய்த்து விடுவார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு, புரஜெக்டர் ரூமில் மாஸ்டர் படத்தையும், ரசிகர்களின் ஆரவாரத்தையும் கண்டு ரசித்து சென்றுள்ளார் விஜய்.

ஏதாவது ஒரு தியேட்டரில்

ஏதாவது ஒரு தியேட்டரில்

மாஸ்டர் படத்துக்கு மட்டுமில்லை, எந்த படம் வெளியானாலும் ஏதாவது ஒரு தியேட்டரில், யாருக்குமே தெரியாமல் செம சீக்ரெட்டாக வந்து படத்தையும் ரசிகர்களின் ரெஸ்பான்ஸையும் பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் தளபதி விஜய். மாஸ்டர் படத்துக்கும் தனது பாணியை மாற்றிக் கொள்ளவில்லை.

விஜய் வந்து பார்ப்பாரா

விஜய் வந்து பார்ப்பாரா

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்கிறாரே.. நடிகர் விஜய் வந்து தியேட்டரில் படத்தை பார்ப்பாரா? என்கிற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. அதற்கெல்லாம் விடைக் கொடுக்கும் விதமாகவே தற்போது இந்த சிசிடிவி வீடியோ காட்சி வைரலாகி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சந்தோஷத்தில் ரசிகர்கள்

சந்தோஷத்தில் ரசிகர்கள்

சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் மாஸ்டர் FDFS காட்சியை தளபதி விஜய் கண்டு ரசித்துள்ளார். ரசிகர்களின் அன்பு ஆரவாரத்தை பார்த்தார் என்பதை அறிந்து கொண்ட தளபதி ரசிகர்கள் சந்தோஷத்தில் சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X