அப்பா இது விஜய் இல்லப்பா பிக்பாஸ் கவின்.. நம்புங்க இது விஜய் சிலை தான்!
Recommended Video
சென்னை: நடிகர் விஜய்க்கு கன்னியாகுமரியில் உள்ள மியூசியத்தில் மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் பலர் அந்த சிலை அருகே செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
இணையத்தில் வெளியான அந்த விஜய் சிலை, நடிகர் விஜய் மாதிரி இல்லை என்றும் பிக்பாஸ் கவின் மாதிரி இருப்பதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
யங் விஜய்
கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்களுக்கு மெழுகு சிலை வைத்துள்ளனர். நடிகர் விஜய் ரொம்ப யங்காக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கிறது அந்த சிலை. இதன் அருகே நின்று கொண்டு விஜய் ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் கவின்
விஜய்யின் இந்த மெழுகு சிலை நடிகர் விஜய் மாதிரி இல்லை என பல விஜய் ரசிகர்களே இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் இவர் பிக்பாஸ் ரசிகர் போல, இந்த சிலையை பார்த்து கவின் மாதிரி இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளார்.
ஈரோடு மகேஷ்
காமெடி நடிகரும், டிவி தொகுப்பாளருமான ஈரோடு மகேஷ் மாதிரி இந்த சிலை இருக்கிறது என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுக்கு இது பரவாயில்ல
நடிகர் விஜய்யின் இந்த மெழுகு சிலையை சிலர் கலாய்த்து வரும் நிலையில், அஜித்தின் விவேகம் சிலைக்கு இது பரவாயில்லை என அஜித் ரசிகர்களை வம்பிழுத்துள்ளார் இந்த விஜய் ரசிகர்.


Click it and Unblock the Notifications











