தல ஸ்டைலில் கோட் - சூட்டுடன் வந்த தளபதி.. கையில இருக்க காப்பு வேற லெவல்.. மனுஷன் பின்னுறாரே

மலேசியா: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமான முறையில் தொடங்கி உள்ளது. சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழாவில் படக்குழு தவிர பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இப்படி இருக்கும்போது, இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் விஜய் கோட் சூட் அணிந்து கொண்டு, செம ஸ்டைலாக வந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகுவதாக விஜய் முடிவெடுத்துள்ளதால் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, தளபதி திருவிழா என்ற பெயரில் இசைக் கச்சேரியுடன் மிகப்பெரிய நிகழ்ச்சியாக மலேசியாவில் தொடங்கிவிட்டது.

Thalapathy Vijay Wears Stylish coat suit For Jana Nayagan Audio Luanch - Video
Photo Credit:

இப்படி இருக்கும்போது நடிகர் விஜயின் ரசிகர்கள் தமிழ்நாடு, மலேசியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்டுள்ளனர். இந்த ஒரு நிகழ்ச்சியால் மலேசியா ஸ்தம்பித்து வருகிறது. இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சிக்கு கோட் - சூட் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக வந்துள்ளார்.

வீடியோ: மைதானத்திற்குள் செல்வதற்கு முன்னர், ரசிகர்களைப் பார்த்து அவர் கையசைத்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல் இவர் கோட் - சூட் அணிந்துள்ளதால் ரசிகர்கள் அவரைப் பார்த்ததும் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தல ஸ்டைலில்: ரசிகர்கள் பலரும் தளபதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் இதுபோலத்தான் கோட் சூட்டில் உடை அணிந்து இருந்தார். அதேபோல் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூட, எப்போதும் ஒரே மாதிரிதான் ஆடைகள் அணிகிறோம், இம்முறை நமது நண்பர் அஜித் போல அணியலாமே என்று முயற்சி செய்து பார்த்தேன். எப்படி உள்ளது. நன்றாக உள்ளதா என்று ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு ரசிகர்கள் ஆர்ப்பரித்த வீடியோ தற்போதும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் இன்றும் கோட்- சூட் அணிந்து கொண்டு, செம ஸ்டைலாக இருக்கிறார். இதில் அவர் அணிந்துள்ள காப்பு செம மாஸாக உள்ளதால் ரசிகர்கள் அவரது புகைப்படங்களுக்காக காத்துக் கொண்டு உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X