‘கோட்’ விமானநிலையத்தில் பரபரப்பாக சென்ற விஜய்.. எந்த நாடு தெரியுமா?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் முழுவீச்சில் உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் சென்னை விமானநிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட். விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், விஜய்யின் 68ஆவது திரைப்படமாக கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. கையில் இருக்கும் படத்தை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழு கவனத்தை செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளதால், நடிகர் விஜய்யின் கடைசி இரண்டு படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இப்படத்தின் மீது ரசிகர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்து இருக்கிறார்கள்.

விஜய்யின் கோட்: இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். விஜய் தந்தை - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் கோட் திரைப்படத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. தந்தையாக நடிக்கும் விஜய்க்கு சினேகா ஜோடியாகவும், மகன் கதாபாத்திரத்திற்கு மீனாட்சி சௌத்ரி ஜோடியாக நடித்துள்ளார். நடிகை சினேகா வசீகரா படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார்.
தெறிக்கவிட்ட விஜய்: மேலும், விஜய்யின் இளமைப்பருவ கதாபாத்திரத்துக்காக கலிஃபோர்னியாவில் டீ.ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்டு கோட் திரைப்படம் அமைந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கேரளாவில் நடைபெற்ற போது, விஜய்க்கு கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து கேரளாவையே தெறிக்கவிட்டனர்.
சென்னை விமானநிலையத்தில்: கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்புக்கான நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றார். க்ரே நிறத்தில் ஷர்ட்டும் முகத்திற்கு மாஸ்கும் அணிந்து கொண்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது. மேலும், கோட் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











