நான் ஆணையிட்டால்.. எம்.ஜி.ஆர் ஸ்டைலில் சாட்டையை கையில் எடுத்த விஜய்.. ஜனநாயகன் படத்தின் 2வது லுக்!

சென்னை: நடிகர் விஜயின் அரசியல் பயணம் சூடு பிடித்திருக்கும் நிலையில் அவரது கடைசி படத்தின் பெயர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டு முதல் போஸ்டர் காலையில் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது போஸ்டர் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த அறிவிப்பு வெளியான போதே. 2026 சட்டமன்ற தேர்தலில் இலக்காக கொண்டு கட்சி செயல்படும் என்றும், அரசியலில் ஈடுபட இருப்பதால் தனது கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும், அவர் அரசியலில் குதிக்க இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

thalapathy vijay jana nayagan

வெங்கட் பிரபுவின் கோட்: இதையடுத்து கடந்த ஆண்டு விஜய்யின் 68வது திரைப்படமாக கோட் படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு விதமான கதாபாத்திரத்தில், அதாவது அப்பா. மகன் ரோலில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, யோகிபாபு என பலர் நடித்திருந்தனர். இந்த படம் தியேட்டரில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஜனநாயகன்: இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதியின் 69 ஆவது படம் கடைசி படம் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தில், விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய், பூஜா ஹெக்டே பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு படக்குழு இன்று தளபதி 69 திரைப்படத்தின் பெயரை அறிவித்துள்ளது.

நான் ஆணையிட்டால்: இப்படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய், மக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் இதை கொண்டாடிய நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில், விஜய் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் சாட்டையை கையில் வைத்து இருக்கிறார். மேலும், அந்த போஸ்டரில் நான் ஆணையிட்டால் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. விஜய் அரசியலில் குதித்து இருக்கும் இந்த நேரத்தில் ஜனநாயகன் என்ற பெயர் பொருத்தமானது என ரசிகள் கூறி வருகின்றனர். மேலும், ஜன நாயகன் என்றால் ஆங்கிலத்தில் People's Hero என்று அர்த்தம்.

thalapathy vijay jana nayagan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X