Leo Thalapathy name: லியோ படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் இதுதானா?
சென்னை: பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு, விஜய் நடித்து வரும் லியோ படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ளது.
லியோ: கடந்த ஓராண்டாக தொலைக்காட்சி, ரேடியோ, சமூகவலைத்தளம் என எந்த பக்கம் திரும்பினாலும்,அதிகம் பேசப்படும் டாபிக்காக லியோ படம் உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி என்று தான் சொல்ல வேண்டும். லியோ படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளருக்கு பலகோடி லாபத்தை ஈட்டியள்ளது. இப்படம் வெளியான பிறகு ஆயிரம் கோடி வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நா ரெடி: நேற்று விஜய்யின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நா ரெடி பாடல் வெளியாகியுள்ளது. விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து அனிருத் மற்றும் அசல் கோளாறு பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.
சிகரெட் சர்ச்சை: நடிகர் விஜய்யின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் போஸ்டர் அடி அண்ணன் ரெடி என்ற வரி இடம் பெற்றுள்ளது விஜய்,அரசியலுக்கு வருவதைத்தான் மறைமுகமாக அறிவிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பாடல் முழுவதும் சிகரெட் காட்சிகள், பாடல் வரிகளில் போதை தொடர்பான வரிகள் என நா ரெடி பாடலில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கதாபாத்திரத்தின் பெயர்: இந்நிலையில், இந்த பாடலில் வரும் ஒரு காட்சியை பக்கவாக நோட் பண்ண இணையவாசிகள், லியோ படத்தின் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் இதுவாகத்தான் இருக்கும் என்று தகவலை பரப்பி வருகின்றனர். அதாவது அந்த பாடலின் ஒரு சீனில் விஜய் நடந்து வரும்போது, அவரது பின்புறமாக ஒரு நிறுவனத்தின் பெயர் பலகை உள்ளது. அதில் தாஸ் & கோ என பெயர் எழுதப்பட்டுள்ளது. அந்த சாம்ராஜ்ஜியத்திற்கே விஜய் தான் தலைமை என சொல்லப்படும் நிலையில், அவரது நிறுவனத்திற்கும் விஜயின் பெயர் தான் சூட்டப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், லியோ படத்தில் விஜய் லியோ மற்றும் தாஸ் என்பது இரண்டு கேரக்டரின் பெயராக இருக்கலாம் என தகவலை பரப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











