Vijay speech: கெட்ட பய சார் இந்த சின்ன பையன்.. குட்டி கதை சொல்லி தெறிக்கவிட்ட விஜய்!

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய நிலையில் அதற்கான முதல் மாநில மாநாடு இன்று விக்ரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அனைவரும் ஆடிப்போகும் அளவிற்கு அட்டகாசமாக பேசினார். அப்போது வழக்கம் போல அவர் பாணியில் குட்டிக்கதைகளை சொன்னார்.

திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் தனக்கென அரசியலில் ஓர் இடம் பிடிப்பதற்காக தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதன் முதல் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டு மேடை அருகே இருக்கும் 100 அடி உயர கம்பத்தில் கட்சியின் கொடியை தவெக தலைவர் விஜய் பட்டனை அழுத்தி ஏற்றினார். இதைத்தொடர்ந்து கட்சியின் கொள்கை மற்றும் செயற்கொள்கை வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் நடிகர் விஜய் தனது உரையை தொடங்கினார்.

vijay tamilaga vetri kazhagam maanaadu

அரசியலுக்கு நான் குழந்தை தான்: ஆரம்பமே அமர்க்களம் என்பது போல இடி மாதிரி பேசத் தொடங்கினார், இசைவெளியீட்டு விழாவில் சந்தித்தோம். இப்போது அரசியல் மேடையில் சந்தித்து இருக்கிறோம். குழந்தை முன்னாடி ஒரு பாம்பு வந்தா, அந்த குழந்தை அதைப்பார்த்து பயப்படாது, அதைப்பார்த்து சிரிக்கும். அதுபோலத்தான் அரசியலும் ஒரு பாம்பு அதைவைத்து விளையாடத்தான் நான் வந்து இருக்கேன். அரசியலுக்கு நாம குழந்தை தான், ஆனால் பாம்பா இருந்தாலும் பயம் இல்லை என்பது தான் எங்களுடைய கான்பிடன்ட். அரசியல் ஒன்றும் சினிமா இல்லையே கொஞ்சம் உஷாராகத்தான் இருக்கணும் என்றார்.

குட்டி கதை: தொடர்ந்த பேசிய விஜய், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஒரு குட்டி கதையை சொன்னார். அதாவது, ஒரு நாட்டுல ஒரு பெரிய போர் வந்தது. அப்போ பவர் புல் இல்லாத ஒரு சிறுவனின் கைக்கு பொறுப்பு வந்தது. அப்போ அந்த நாட்டில் இருந்த பெரிய தலைகள் எல்லாம் பயந்தார்கள். சிறுவன் போர் படையுடன் போருக்கு சென்றானாம். அப்போது அந்த பெரிய தலைகள் நீ எப்படி போருக்கு போவ, உனக்கு என்ன தெரியும். போர் அனுபவம் உனக்கு இல்லை என்றார்கள். ஆனால் அந்த சிறுவன் எந்த பதிலும் சொல்லவில்லை. இது சங்க இலக்கியத்துல இருக்கு. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சுக்கோங்க. படிக்க தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க. ஆனா கெட்ட பய சார் அந்த சின்ன பையன் என்றார். இந்த கதையை கேட்ட தொண்டர்கள் உற்சாகத்தில் ஆட்டம் போட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X