கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் இன்று ரீ ரிலீஸான நிலையில், திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் குவிந்து ஆட்டம் பாட்டத்துடன் திரைப்படத்தை கொண்டாடி பார்த்து மகிழ்ந்தனர். 600க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளிலேயே பல கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ சூரியா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் 2004 ஆண்டு ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இதில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், , நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம், பாண்டு, வினோத் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி என பலர் நடித்திருந்தனர். விஜய் கபடி வீரராக நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. நடிகர் விஜய் திரைப் பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாகும்.

கில்லி ரீ ரிலீஸ் : இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 600 ஸ்க்ரீன்களில் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் கில்லி ரீ ரிலீஸ் படத்தை சர்வதேச அளவில் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். இப்படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள், கில்லி படத்தை தொலைக்காட்சியில் 50 முறையாவது பார்த்து இருப்போம். ஆனால், தியேட்டரில் பார்ப்பது வேறமாதிரி அனுபவமாக இருக்கிறது.
ரஜினிக்கு பாட்ஷா விஜய்க்கு கில்லி: இந்த படத்தில் அனைத்துப்பாட்டும் சூப்பராக இருக்கும், அர்ஜூனரு வில்லு, கொக்கர கொக்கரக்கோ, அப்படி போடு போடு பாட்டை தியேட்டரில் கேட்பதற்கு செம வைப்பாக இருந்தது. அந்த பாட்டை மூன்று முறை ரிப்பீட் போட்டாங்க. கில்லி திரைப்படம் எவர் கிரின் திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பாட்ஷா திரைப்படம் என்றால், தளபதி விஜய்க்கு கில்லி. இன்னும் 20 வருஷம், 50 வருஷம் ஆனாலும் கில்லி படத்திற்கு இருக்கும் மாஸ் குறையவே குறையாது என்றனர்.
முதல் நாள் வசூல்: 600க்கும் மேற்பட்ட தியேட்டரில் வெளியான கில்லி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங் விவரங்களை வைத்து பார்க்கும் போது முதல் நாளில் மட்டுமே படம் உலகம் முழுவதும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. கில்லி படத்தின் வரும் வசனம் போல, இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம் அந்த இடம், எல்லா ஏரியாலயும் ஐயா கில்லி டா என்பதை கில்லி படம் நிரூபித்து உள்ளது என ரசிகர்கள் இணையத்தில் கில்லி படத்தை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











