Jana Nayagan: இது வெறித்தனம்.. தளபதி விஜய்யின் ஜன நாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ தெரியுமா?
சென்னை: தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பை தற்போது தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் வெளியிட்டுள்ளது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலில் இருந்து ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்ட நிலையில், ட்ரோல்கள் குவிந்தன.
ஆனால், தற்போது தளபதி விஜய்யின் வெறும் கால் போஸ்டரை மட்டுமே வெளியிட்டு படக்குழு ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துள்ளது.

ஜன நாயகன் படத்துக்காக சுமார் 250 கோடி வரை விஜய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
ஜன நாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ?: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சற்றுமுன் வெளியான நிலையில், ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
வெறும் கால் மட்டுமே: முன்னதாக மொத்த முகமும் தெரியும் விதமாக வெளியான போஸ்டர் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெறும் தளபதி விஜய்யின் கால் போஸ்டரை மட்டும் வெளியிட்டு தளபதி என்ட்ரி வரும் நவம்பர் 8ம் தேதி முதல் என அறிவித்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளனர்.
1000 கோடி அடிக்குமா?: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் மட்டுமே 1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்த முடியும் என ரசிகர்கள் ரொம்ப காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 600 கோடி வரை இருவரும் வசூல் சாதனை நடத்தி வரும் நிலையில், விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் பட்ஜெட்டே விஜய்யின் சம்பளத்தை சேர்த்தால் 400 கோடி வரை வரும் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், 1000 கோடி வசூலை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் அள்ளுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 500 கோடி முதல் 700 கோடி வரை வர வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். எச். வினோத் படத்தை தாறுமாறாக இயக்கியிருந்தால் மட்டுமே பெரிய வசூல் வேட்டை சாத்தியமாகும்.


Click it and Unblock the Notifications











