Jana Nayagan: போடுடா வெடியா.. ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே,பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இத்திரைப்படத்தின் முதல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். அரசியலில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தார். இது விஜய் ரசிகர்களை சங்கடப்படுத்தினாலும், அவர் அரசியலுக்கு வருவதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தளதிபதி விஜய்: தளபதியின் கடைசி படமாக தளபதி 69 திரைப்படம் இருக்கும் என்பதால், இது ஒரு பக்காவான கமர்ஷியல் படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு , குடியரசு தினத்தை முன்னிட்டு தளபதி 69 திரைப்படத்தின் பெயரை படக்குழு அறிவித்தது. இப்படத்திலிருந்து வெளியான டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியான பின் இது முழுக்க முழுக்க அரசியல் படம் என்பது தெரியவந்துள்ளதால், இப்படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 'ஜன நாயகன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் நிலையில், ஜனவரி மாதம் படம் வெளியாகி, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என விஜய்யின் தீவிர ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதல் பாடல்: பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய்யுடன் பூஜா ஹெக்டே இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சத்யன் சூரியன் கவனிக்க, படத்தொகுப்பை பிரதீப் ஈ ராகவ் மேற்கொள்கிறார். தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் நடுவில் நிற்க அவரை சுற்றி நிற்கும் மக்கள் அனைவரும் அவர் நெஞ்சின் மீது கை வைத்திருக்கின்றனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் முதல் பாடல் நாளை சனிக்கிழமை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











