Jana nayagan : இது எம்ஜிஆர் சாட்டையா? அண்ணாமலை சாட்டையா? விஜய்யை வச்சு செய்யும் இணையவாசிகள்!
சென்னை; குடியரசு தினத்தை முன்னிட்டு தளபதி விஜயின் 69வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காலையில் வெளியானது. இதைத்தொடர்ந்து இரண்டாவது போஸ்டர் மாலை வெளியானது. அதில், விஜய் சாட்டையுடன் இருப்பதால் இணையவாசிகள் விஜய்யை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி காட்டினார். இதையடுத்து, கடந்த வாரம் பரந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக அவர்களை நேரில் சந்தித்து உங்களின் போராட்டத்திற்கு துணையாக நிற்பேன் என்றார்.

ஜனநாயகன்: இப்படி விஜய்யின் அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. அதில் படத்தின் பெயர் ஜனநாயகன் என்றும், விஜய் மக்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது போல வெளியாகியிருந்தது. அந்த போஸ்டர் வரவேற்பை பெற்ற நிலையில், ஜனநாயகம் திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் பிற்பகலில் வெளியானது. அந்த போஸ்டரில்,விஜய் கையில் சாட்டையுடன் இருக்க, நான் ஆணையிட்டால் என்ற வசனமும் இடம் பெற்று இருந்தது.
விஜய்யை கலாய்க்கும் பேன்ஸ்: இந்த போஸ்டரைப்பார்த்த இணையவாசிகள் எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் எம்ஜிஆர் சாட்டையை கையில் எடுத்து நம்பியாரை அடித்து திருத்துவார். அப்போது தான், நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார் என்ற பாடல் வரும், அதே போல, விஜய் ஊழல் அரசியல்களை சாட்டையால் அடிக்கப்போகிறாரா என்றும், இல்லை அண்ணாமைலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டாரே அதுவா என்றும் விஜய்யை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இன்னும் சில இணையவாசிகள் பல காமெடி வீடியோக்களை வெளியிட்டு ட்ரோல் செய்கின்றனர்.

அஜித்தை வைத்து மாஸ் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 69ஆவது படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரைன், மோனிஷா பிளெஸி, மமிதா பைஜூ பலர் நடித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











