Vijay Kutty Story: லியோ வெற்றி விழாவில் காக்கா - கழுகு கதையை இழுத்த விஜய்.. ரஜினிக்கு பதிலடியா?
சென்னை: ரத்னகுமார் மட்டுமில்லை நானும் பதிலடி கொடுப்பேன் என அதிரடியாக காக்கா - கழுகை தனது குட்டி ஸ்டோரியில் இழுத்து நடிகர் விஜய் தரமான சம்பவத்தை லியோ வெற்றி விழாவில் செய்து விட்டார் என விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களுடன் மீண்டும் சோஷியல் மீடியா சண்டையில் குதித்துள்ளனர்.
சோஷியல் மீடியாவில் சண்டை போட வேண்டாம் என்று தொட்டிலையும் ஆட்டி விட்டு, காக்கா - கழுகு கதையை சொல்லி கிள்ளியும் விடுகிறாரே விஜய் என பலரும் விவாதத்தை ஆரம்பித்துள்ளனர்.

மனைவி, மகன் வரல: லியோ வெற்றி விழாவுக்கு நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் வந்து அந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அம்மாவை தவிர குடும்பத்தில் இருந்து யாருமே வரவில்லை.
அனிருத் எஸ்கேப்: ஜெயிலர், ஜவான் விழாக்களில் எல்லாம் முதல் ஆளாக இருந்த அனிருத் லியோ படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்காமல் வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை த்ரிஷா, அர்ஜுன், லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலி கான், சாண்டி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

குட்டி ஸ்டோரி: "ஒரு காட்டுல சிங்கம், புலி, யானை, மான், காக்கா , கழுகு" என சொன்ன உடனே விஜய் சிரிக்க மொத்த நேரு ஸ்டேடியமும் சிரிக்க ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் கேப் விட்டு மீண்டும் குட்டி ஸ்டோரிக்குள் சென்ற விஜய் காட்டுக்கு வேட்டைக்கு ரெண்டு பேர் போனாங்க.. ஒருத்தர் வில் அம்போட போய் முயலை வேட்டையாடிட்டு வந்தாரு.. இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வச்சு ஒன்றும் இல்லாமல் வந்தார். இதில் யார் வெற்றியாளர் யாரு, கண்டிப்பா யானைக்கு குறி வச்சவர் தான்.. பெருசா கனவு காணுங்க என குட்டி ஸ்டோரி மூலம் மறைமுகமாக பெரிய மேட்டரையே விஜய் பேசியுள்ளார்.
ரஜினிக்கு பதிலடி?: அரசியலில் கமல்ஹாசன் முயற்சித்து தோல்வி அடைந்தாலும் அவர் தான் வெற்றியாளர் என்றும் அரசியல் பக்கம் ஒதுங்காமல் சினிமாவில் ரஜினி தொடர்ந்து சாதித்தாலும் அவர் வெற்றிப் பெறவில்லை என்கிற ரீதியில் தான் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லி உள்ளார் என விஜய் ரசிகர்கள் அதையும் டீகோடிங் செய்து வருகின்றனர். 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என விஜய் சொல்லி உள்ள நிலையில், கண்டிப்பாக தளபதி 68 படத்துக்கு பிறகு அரசியலில் அதிரடியாக நுழைவார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











