Leo: ஒன்றா ரெண்டா லியோ சர்ச்சை… விஜய்யை காப்பாற்ற லலித் செய்த வேலை!

சென்னை: லியோ படம் வெளியாவதற்கு முன்பே பல விதமான சர்ச்சையில் சிக்கிய இத்திரைப்படம் வெளியான பிறகும், வேறு விதமான சர்ச்சை உருவாகி உள்ளது.

Thalapathy Vijays Leo Box Office Collection Controversy

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சாண்டி, மிஷ்கின் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

லியோ: லியோ படம் வெளியாவதற்கு முன்னே பல விதமான பிரச்சனைகளை சந்தித்தது. இதையடுத்து கடந்த 19ந் தேதி லியோ படம் வெளியானது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படம் லோகேஷ் கனகராஜ் படம் போல இல்லை என்றும், விஜய் படம் போல இருப்பதாக படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன.

முதல் வார வசூல்: படத்திற்கு மோசமான விமர்சனம் வந்த போதும், முதல் வார முடிவில் உலகளவில் ரூ.461 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

லலித்தின் டார்க்கெட்: ஆனால், திரையரங்க தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்க வேண்டும் என்பது தான் லலித்குமாரின் டார்க்கெட் என்று கூறியிருந்தார். மேலும், தயாரிப்பாளரே சொந்த காசை போட்டு டிக்கெட் புக் செய்து படத்திற்கு கூட்டம் வருவது போல் காண்பிக்கிறார் என அடுக்கடுக்கான பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அதிருப்தியில் தியேட்டர் ஓனர்ஸ்: மேலும், லியோ படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் தியேட்டர்களுக்கு 20% தான் கொடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது எங்களுக்கு எப்படி கட்டுப்படியாகும் என பல உரிமையாளர்கள் வெளிப்படையாகவே புலம்பினர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த திரையரங்க உரிமையாளர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தனர்.

Thalapathy Vijays Leo Box Office Collection Controversy

முக்கிய புள்ளி: ஆனால், அந்த மீட்டிங்கை லலித் திடீரென ரத்து செய்துள்ளார். இந்தக் கூட்டம் நடந்து விஷயம் மீடியாக்களுக்கு தெரிந்தால் அது, விஜய் மற்றும் லியோ படத்திற்கு மிகப்பெரும் பாதிப்பாக அமைந்து விடும் என்பதால், காதும் காதும் வைத்தபடி லலித் முக்கிய புள்ளியை வைத்து இந்த பிரச்சனையை தள்ளிப்போட்டுள்ளார். பெரிய புள்ளி இந்த விஷயத்தில் தலையிட்டதால், என்ன சொல்வது என்று தெரியாமல், தியேட்டர் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X