Leo memes: லோகி என்னடா பண்ணி வச்சிருக்க.. இணையத்தில் வலம் வரும் மீம்ஸ்.. டென்ஷனான பேன்ஸ்!

சென்னை: லியோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் லியோ படம் குறித்த மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டாக காஷ்மீரில் நடைபெற்றது.

Thalapathy Vijays Leo Memes Trending on Social Media

பான் இந்திய திரைப்படமாக இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு இன்று வெளியானது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலை அள்ளியதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. லியோ படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் படத்தின் படம் குறித்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும் சோஷியல் மீடியாவில் காட்டுத் தீ போல பரவியது.

சோகத்தில் ரசிகர்கள்: லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில், விஜய் குட்டி கதை சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்துவார் என்று பார்த்தால் அதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் பாதுகாப்பு கருதி இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால், விஜய்யின் பேச்சை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Thalapathy Vijays Leo Memes Trending on Social Media

கெட்டவார்த்தை சர்ச்சை: கவலை அடைந்த ரசிகர்களை குஷிப்படுத்த டிரைலர் வெளியானது, வன்மம், வெறித்தனம், ரத்தம், அடிதடி என்று இருந்த டிரைலரில் விஜய் கெட்டவார்த்தை பேசிவிட்டார் என்று, சோஷியல் மீடியாவே அலறியது. இதற்கு முழுபொறுப்பு ஏற்றுக்கொண்ட லோகேஷ் கனகராஜ் அந்த வார்த்தையை மியூட் செய்துவிட்டதாகவும், படத்தில் கெட்டவார்த்தை வராது என்றும் விளக்கம் கொடுத்தார்.

9 மணி ஷோ: இப்படி பல பிரச்சனைகளை சந்தித்த லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை போன்ற இடங்களில் அதிகாலை 4 மணிக்கு வெளியான திரைப்படம் தமிழகத்தில் 9 மணிக்கு வெளியானது. இதனால்,விஜய் ரசிகர்கள் அருகிலுள்ள பக்கத்து மாநிலத்திற்கு சென்று படத்தின் அதிகாலை காட்சியை பார்த்து ரசித்தனர்.

லோகி என்னடா பண்ணி வச்சிருக்க: லியோ படத்திற்கு நல்ல விமர்சனம் குறித்து வரும் நிலையில் ஒரு நெட்டிசன்ஸ் லியோ படம் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி மீம்ஸ் போட்டுள்ளார். அதில், டேய்... லோகி என்னடா பண்ணி வச்சிருக்க 2nd halfல... திருச்சியில் இருந்து கேரளாவிற்கு 5K செலவு பண்ணி வந்தேன்டா இப்படி பண்ணிட்டியேடா.. இதுக்கு ஊர்ல 9 மணி ஷோல 500 ரூபாய் கொடுத்தே படம் பார்த்து இருப்பேன். எவ்வளவு எதிர்பார்ப்போட வந்தேன், சேடிஸ்பேக்ஷன் இல்லை என கூறியுள்ளார். இந்த மீம்ஸ்சை பார்த்த ரசிகர்கள் அந்த நெட்டிசனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X