லியோ சக்சஸ் மீட்.. 234 தொகுதிக்கு 20 பேர்.. அனல் பறக்கும் வெற்றி விழா!

சென்னை: லியோ திரைப்பட வெற்றி விழா இன்று மாலை நடக்க இருக்கும் நிலையில், நுழைவு டிக்கெட்டுகளை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இயக்க நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

Thalapathy vijays leo movie success function celebration

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.148 கோடியை வசூலித்த நிலையில், 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டது.

அதேநேரத்தில்,12 நாட்களில் சர்வதேச அளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. லியோ வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

லியோ: லியோ வெற்றி விழா கொண்டாட்டம் இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், விஜய் கலந்து கொள்ள இருக்கிறார். இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இசைவெளியீட்டு விழா பாதுகாப்பு காரணத்தால் ரத்து செய்யப்பட்டது.

காவல்துறை அனுமதி: இன்று நடைபெற உள்ள லியோ வெற்றி விழாவுக்கு, காவல்துறை நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. விழாவிற்கு வரும் ரசிகர்களிடம் பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதோடு ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்றும் அடுக்கடுக்கான கன்டிஷன்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

தொகுதிக்கு 20 பேர்: லியோ திரைப்பட வெற்றி விழா இன்று மாலை நடக்க இருக்கும் நிலையில், நுழைவு டிக்கெட்டுகளை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இயக்க நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதில் தொகுதிக்கு 20 பேர் என 234 தொகுதிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Thalapathy vijays leo movie success function celebration

மேலும், மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுக்கான டிக்கெட்டுகளை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். இந்த விழாவில் மக்கள் இயக்க நிர்வாகிகள் 4,600 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X