Thalapathy: லியோ தெலுங்கு வெளியீட்டிற்கு வந்த சிக்கல்..பணத்தை கொடுத்து சரி கட்டிய படக்குழு!
சென்னை: லியோ படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் திடீரென தடை விதித்த நிலையில், படக்குழு பணத்தை கொடுத்து சரிகட்டி உள்ளது.
லியோ படத்திற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. முதலில் தமிழகத்தில் 5 சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்தது.

மேலும்,ஐந்து காட்சிகளுக்கு மேல் திரையிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் லியோ பட குழுவினரை அதிர்ச்சி அடைய செய்தது.
காலை 9 மணிக்கு படம்: இந்த பிரச்சனை காரணமாக சென்னையில் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் மட்டும் லியோ படம் காலை 9 மணிக்கு வெளியாகிறது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.
லியோ படத்திற்கு தடை: லியோ படத்திற்கு இருக்கும் பிரச்சனை போதாது என்பது போல, லியோ தெலுங்கு பதிப்பு வெளியாவதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது, D Studio என்ற நிறுவனம் லியோ என்ற தலைப்பு தங்களுடையது என்று D ஸ்டுடியோ நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தை அக்டோபர் 20ஆம் தேதி வரை வெளியிட தடை என உயர் நீதிமன்றம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பணத்தை கொடுத்து சரிகட்டிய படக்குகுழு: இதனால் லியோ படம் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் வெளியாகாது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, லியோ தயாரிப்பு நிறுவனம் டி ஸ்டூடியோவிடம் பேசி சுமூக தீர்விற்கு வந்துவிட்டதாகவும், தலைப்பிற்காக சுமார் 25 லட்சம் பணத்தைகொடுத்து பேச்சுவார்த்தையை சமூகமாக முடிந்துள்ளது.
தலைப்பு எங்களுடையது என் வழக்கு தொடர்ந்த D ஸ்டுடியோ நிறுவனம் லியோ படம் வெளியாக என்ஓசி வழங்கி உள்ளதாகவும், வழக்கை அந்நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், லியோ தெலுங்கு படம் வெளியாக எந்த சிக்கலும் இல்லை.


Click it and Unblock the Notifications











