Vijay: "தளபதி விஜய்யோட சின்னமா இதுதான் இருக்கணும்".. அப்படி என்ன சின்னம் தெரியுமா?

சென்னை: 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை சந்தித்து பரிசுகளை விஜய் வழங்கும் போதே அவரது அரசியல் ஆட்டம் ஆரம்பித்து விட்டது என விமர்சனங்கள் குவிந்தன.

அந்த நிகழ்ச்சியிலே சில மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என சொல்லியிருந்தனர்.

Thalapathy Vijays party logo will be this double hand mersal movie pose?

இந்நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் உள்ள தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் நடிகர் விஜய். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தளபதி விஜய்யின் கட்சி சின்னம் குறித்து தங்களின் விருப்பம் குறித்து பேசியுள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.

லியோ ஷூட்டிங் நிறைவு: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படத்தின் விஜய் போர்ஷன் ஷூட்டிங் நிறைவு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அடுத்ததாக விஜய் தளபதி 68 படத்தின் பூஜை மற்றும் அந்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அதற்கு முன்னதாக தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் விஜய்.

புஸ்ஸி ஆனந்த் தீவிரம்: என்ட்ரி பாஸ் இல்லாத கார்கள் இந்த இடத்தில் நிற்கக் கூடாது என்பது முதல் நிகழ்ச்சிக்கு யாரெல்லாம் வரவேண்டும், நிகழ்ச்சி ஏற்பாடுகள் எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை புஸ்ஸி ஆனந்தே களத்தில் இறங்கி வேலை பார்க்கும் காட்சிகள் வீடியோக்களாக வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய்யின் வலதுகரமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தினரை வழிநடத்தி வரும் புஸ்ஸி ஆனந்த் தளபதி விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என உறுதியுடன் இருக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

அந்த சின்னம்: மெர்சல் படத்தில் நடிகர் விஜய் தன்னை கைது செய்து அழைத்து வரும் போது தனது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் வைத்து வணக்கம் செய்யும் காட்சி ரசிகர்களின் ஃபேவரைட்.

அதே போன்ற சின்னத்தை தளபதி விஜய் தனது கட்சிக்கு அறிமுகப்படுத்தினால் நல்லா இருக்கும் என அவரது நிர்வாகத்தினர் சிலர் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இன்னமும் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் சினிமா ரசிகர்களாகவே ஏன் உள்ளனர் என்கிற கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் அந்த வீடியோவுக்கு கீழ் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X