கெட்ட வார்த்தை..ரத்தம் தெறிக்கும் காட்சிகள்..லியோ படத்தில் 13இடங்களில் கத்தரி போட்ட சென்சார் போர்டு!
சென்னை: தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ படத்தில் சென்சார் போர்டு 13 இடத்தில் கத்திரிப்போட்டு தூக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ், த்ரிஷா,பிரியா ஆனந்த்,அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளதால், இப்படத்தில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தளபதியின் லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களில் பணிபுரிந்த நிலையில், மூன்றாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இரண்டு பாடல்களும் இணையத்தில் அதிரடி காட்டி வருகிறது.
இசைவெளியீட்டு விழா ரத்து: நான் வரவா ரெடியா பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போல காட்சிகள் இருந்ததால், அது இணையத்தில் பெரும் புயுலை கிளப்பியது. மேலும், விஜய் அரசியல் வருகையை குறிக்கும் விதமாக இந்த பாடலின் வரிகள் இருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. இந்த சர்ச்சை ஓரளவுக்கு ஓய்ந்து இருந்த நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின் ரத்து செய்யப்பட்டது.
டிரைலர் ரிலீஸ்: பாதுகாப்பு காரணங்களுக்காக இசைவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாகவும், அரசியல் தலையீடு இருப்பதாக விவாதங்கள் பூதாகரமாக கிளப்பியது, விஜய்யின் பேச்சை கேட்க ஆவலுடன் கத்திருந்த ரசிகர்கள் துவண்டு போனதால் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த கடந்த 5ந்தேதி படக்குழு டிரைலரை வெளியிட்டது.

சர்ச்சைக்கு விளக்கம்: அந்த டிரைலரில் விஜய் கெட்டவார்த்தை பேசியது சர்ச்சையையும் கண்டனத்திற்குள்ளானது. விஜய் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும் பலர் ஓபனாகவே பேச அவரை அர்ச்சனை செய்தனர். இந்த சர்ச்சை குறித்து விஜய் எதுவும் பேசாமல் இருந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த லோகேஷ் கனகராஜ், லியோ ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த ஆபாச வார்த்தை கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தேவைப்பட்டது. இந்த வசனத்தை பேச விஜய் தயங்கினார். ஆனால் கதாபாத்திரத்துக்கு இது தேவை என்று அழுத்தமாக கூறினேன் என்றார்.
13 இடத்தில் கட்: இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் புகைபிடிக்கும் காட்சி மற்றும் போதைப்பொருட்கள், ரத்தம் தெறிக்கும் வன்முறை, ஆபாச வார்த்தைகள் என 13 கட்டுகள் போட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications