திருமணத்திற்கு தனியாக வந்த விஜய்யின் மனைவி.. உண்மையிலேயே பிரிந்துவிட்டார்களா? ரசிகர்கள் கவலை!
சென்னை: இசை வெளியீட்டு விழா, உறவினர்களின் திருமண நிகழ்ச்சி என எதிலும் தலைகாட்டாமல் இருந்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பல ஆண்டுகளுக்கு பிறகு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய், அண்மையில் இவர் நடிப்பில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. லோகேஷ் கனராஜ் இயக்கிய இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜூன்,சஞ்சத்,சாண்டி மாஸ்டர்,கௌதம் மேனன் என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 படமாக GOAT திரைபடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. விஜய் பாடி உள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுதி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது.

தமிழக வெற்றிக்கழகம்: கோட் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் கமிட்டாகியுள்ளார். அதுதொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், அரசியலில் தீவிரமாக களமிறங்கி தனது கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் என்பதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் விஜய், 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க உள்ளார். இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விஜய்,சங்கீதா: விஜய்யின் மனைவி சங்கீதா, மாஸ்டர் படம் வரை விஜய்யின் அனைத்து பட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அதே போல, வேறு ஏதும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் விஜய், தனது மனைவியுடன்தான் வருவார். ஆனால், அண்மைக்காலமாக அவரை தனது மனைவியுடன் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. லியோ இசைவெளியீட்டு விழாவிற்கு விஜய்யின் அப்பா,அம்மா மட்டுமே வந்திருந்தார்கள். இதனால், விஜய் மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
இது தான் காரணம்: விஜய், தற்போது சென்னையில் தங்கியிருப்பதாகவும் அவரது மனைவி லண்டனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல, விஜய்யின் மகன் சஞ்சையும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், இதுகுறித்த விஜய் இதுவரை ஒரு வாழ்த்துக்கூட சொல்லவில்லை. மேலும், விஜயை அரசியலுக்கு வர வேண்டாம் என்று கூறியதாகவும் அதை மீறி அவர் விஜய் அரசியலுக்கு வந்ததுதான் இந்த பிரிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
உண்மையில் பிரச்சனையா: இந்நிலையில், பல ஆண்டுகளான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தலைகாட்டாமல் இருந்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. திரைப்பிரபலங்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து இருந்த நிலையில், சங்கீதா மட்டும் தனியாக திருமணத்தில் கலந்து கொண்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இருவரும் உண்மையில் பிரிந்துவிட்டார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஷங்கரின் மகள் திருமணம்: இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், நேற்று உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுடன் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்னம்,சுஹாசினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.


Click it and Unblock the Notifications











