நியூ இயர் வரைக்கும் வெயிட் பண்ண முடியாது.. இன்னைக்கே அப்டேட் கொடுங்க.. வெறியேறும் புள்ளிங்கோ!
சென்னை: 'தளபதி 64' டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தளபதி ரசிகர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையான இன்று கொண்டாட ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிடுங்க என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 64 படக்குழுவினரிடம் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையின் ஒரு பகுதியாக #Thalapathy64UpdateDemand என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சிக்கிய சாந்தனு
'தளபதி 64' படத்தின் அப்டேட் கேட்டு நடிகர் சாந்தனுவை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து நச்சரிக்கத் தொடங்கி விட்டனர். மேலும், சாந்தனுவை வைத்து வீடியோ மீம்ஸ் போட்டும் கலாய்த்து வருகின்றனர். நடிகர் சாந்தனுவும் அதை பார்த்து ரசித்து லைக் போட்டு வருகிறார்.
இன்னைக்கு 6 மணிக்கு
தளபதி 64 அப்டேட் இன்னைக்கு 6 மணிக்கு வந்தே ஆகணும்னு தளபதி ரசிகர்கள் டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அப்டேட் வருது
தளபதி 64 குறித்த அப்டேட் நிச்சயம் இன்று வெளியாகும் என விஜய் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் ட்வீட் போட்டு வருகின்றனர். தளபதி 64 படக்குழு ஏதாவது பார்த்து செய்தால் நல்லா இருக்கும்.
அப்டேட் எப்போ வரும்
பிகில் படத்தில் ஃபுட்பால் ஸ்டேடியத்தில் விஜய் என்ட்ரி கொடுக்கும் போது ஒரு சின்ன குழந்தை சத்தமிட்டு கூப்பிடும் அந்த புகைப்படத்தை போட்டு, அப்டேட் எப்போ வரும் லோகேஷ் அண்ணா என இயக்குநரிடம் நைஸாக அப்டேட்டை உருவ பார்க்கின்றனர்.
அப்டேட் ப்ளீஸ்
தளபதி 64 படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்து வரும் நடிகர் சாந்தனுவிடம் அப்டேட் ப்ளீஸ் ப்ரோ என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
புள்ளிங்கோ வெறித்தனம்
அப்டேட் வேணும்.. புள்ளிங்கோ வெறித்தனம் என ட்வீட் போட்டு, தங்களுக்கு இன்னைக்கு எப்படியாவது ஒரு அப்டேட் வேணும் என செல்லமாக மிரட்டியும் வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் ட்ரீட்
6 மணிக்கு தளபதி 64 அப்டேட் வந்தா எல்லா புள்ளிங்களும் ஆன்லைன் வந்து டேக்கை டிரெண்ட் செய்ய வேண்டும். கிறிஸ்துமஸ் ட்ரீட்டுக்காக மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
அப்டேட் ட்ரோல்
விஜய் ரசிகர்கள் இன்னைக்கு அப்டேட் கேட்கிறாங்கன்னு கொடுத்தா, அடுத்த வாரம் நியூ இயருக்கு இன்னொரு அப்டேட் கேட்பாங்களே என்ன செய்ய என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புலம்புவது போன்ற ட்ரோலை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மோஷன் போஸ்டர்
எல்லாரும் அப்டேட் கேட்டுக்கிட்டு இருக்கும் போது ஒருத்தன் மோஷன் போஸ்டர் அப்டேட்டோட வந்தான் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் ட்ரீட் தருவார் என ஐஸ் வைத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











