விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தளபதி65 பர்ஸ்ட் லுக் எப்போ ரிலீஸ் தெரியுமா ?
சென்னை : தளபதி65 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ந் தேதி மாலை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 19ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த சூப்பரான இனிப்பான செய்தி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது.

ஜார்ஜியாவில் படப்பிடிப்பு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்தது. ஜார்ஜியாவில் படமாக்கவேண்டிய சுமார் 25 முதல் 30 சதவீத படப்பிடிப்புகள் முடிவந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

2ம் கட்ட படப்பிடிப்பு
இரண்டாம் கட்டபடப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருந்தது. இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த நிலையில் கொரோனாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செட் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. கொரோனாவின் தாக்கம் குறைந்ததும் மீண்டும் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த உடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 21ந் தேதி?
தளபதி65 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ந் தேதி மாலை வெளியாக உள்ளதாக சமூகவலைத்தளத்தில் வேகமாக தகவல் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 19ந் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.

இசை
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மெர்சல், சர்க்கார் திரைப்படத்தைத் தொடர்ந்து யோகி பாபுவும் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











