தளபதி 66 பிரம்மாண்ட பூஜை எப்போ தெரியுமா? 5 டோலிவுட் நடிகர்கள் கலந்துக்கிறாங்களாம்!

சென்னை: பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தளபதி 66 படத்திற்கு அடுத்த மாதம் 14ம் தேதி பூஜை போட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தோழா படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார்.

பான் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்தின் பட பூஜை ஹைதராபாத்தில் நடைபெற போகிறது.

இறுதிகட்டத்தில் பீஸ்ட்

இறுதிகட்டத்தில் பீஸ்ட்

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பூஜா ஹெக்டேவின் போர்ஷனும் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தளபதி 66 படத்தை ஆரம்பிக்க நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

தளபதி 66 ஆரம்பம்

தளபதி 66 ஆரம்பம்

கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான தோழா படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி படிப்பளி தான் தளபதி 66 படத்தை இயக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடி படமாக உருவாக உள்ள இந்த படம் இந்தியிலும் டப் செய்யப்பட்டு பான் இந்திய படமாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அக்டோபரில் பூஜை

அக்டோபரில் பூஜை

இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 14ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் பூஜை ஹைதராபாத்தில் போடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரம்மாண்டமாக நடக்க உள்ள அந்த விழாவில் தெலுங்கின் முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

5 டோலிவுட் நடிகர்கள்

5 டோலிவுட் நடிகர்கள்

தளபதி விஜய்யின் 66வது பட பூஜை ஹைதரபாத்தில் நடக்க உள்ள நிலையில், தெலுங்கு திரையுலகின் 5 முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராம்சரணின் எவடு, மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட மாஸ் படங்களை இயக்குநர் வம்சி இயக்கி உள்ள நிலையில், மகேஷ் பாபு, ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் ஹீரோயின்

பாலிவுட் ஹீரோயின்

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி வரும் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வருகிறார். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் மற்றும் வலிமை படத்தில் ஹுமா குரேஷி என பாலிவுட் ஹீரோயின்கள் நடித்து வரும் நிலையில், விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 66 படத்திலும் பாலிவுட் நடிகையை புக் செய்ய படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. கியாரா அத்வானி பிசியாக உள்ள நிலையில், க்ரித்தி சனோன் மற்றும் திஷா பதானியின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

தமன் இசை

தமன் இசை

தளபதி 66 படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். டோலிவுட்டில் சமீபத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்து வரும் தமன் தளபதிக்கு தாறுமாறான பாடல்களை போட காத்துக் கொண்டிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அனிருத் கூட்டணியில் இருந்து விஜய் தமன் உடன் கைகோர்க்க உள்ளார்.

120 கோடி

120 கோடி

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள இந்த பைலிங்குவல் படத்திற்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த தீபாவளி

அடுத்த தீபாவளி

பீஸ்ட் படத்தை அடுத்த ஆண்டு சம்மர் ரிலீசாக கொடுக்க படக்குழு முயற்சித்து வரும் நிலையில், தளபதி 66 படம் அடுத்த ஆண்டு தீபாவளியை டார்கெட் செய்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக இந்த படம் உருவாக உள்ளதாகவும் வம்சியின் கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X