தளபதி 67 டைட்டில் என்னவாக இருக்கும்.. ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்!
சென்னை : நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளன.
இன்றைய தினம் படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்களிடையே உற்சாகம் பற்றியுள்ளது.
இதையடுத்து தளபத 67 டைட்டில் என்னவாக இருக்கும் என பல்வேறு கணிப்புகள் சமூக வலைதளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கின்றன.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. படத்தின் அறிவிப்புடன் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

அதிரடி காட்டிய தளபதி 67 அப்டேட்கள்
இந்த அறிவிப்புகளை தொடர்ந்து நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பையும் தயாரிப்புத் தரப்பு தொடர்ந்து வெளியிட்டு அதிரடி காட்டியது. படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், சாண்டி என அடுத்தடுத்து 6 மணிநேரங்களுக்கு 6 நடிகர்களை அறிமுகப்படுத்தியது.

விஜய்யுடன் இணைந்த த்ரிஷா
எங்கே த்ரிஷாவை காணோமே என்று ரசிகர்கள் யோசித்த நிலையில், அடுத்த நாளிலேயே த்ரிஷா குறித்த அறிவிப்பும் வெளியானது. 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேங்ஸ்டர் படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்பதே ரசிகர்களின் யோசனையாக உள்ளது.

வெளியான பூஜை ஸ்டில்ஸ்
தொடர்ந்து படத்தின் பூஜை ஸ்டில்களும் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. தற்போது படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்கென தனி விமானத்தில் நடிகர்கள், நடிகைகள் ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் இணையவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகின.

டைட்டில் வெளியீடு
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இதனால் இணையதளத்தில் தளபதி 67 தீ பற்றியுள்ளது. படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பது குறித்த பல்வேறு கணிப்புகள் உலவிக் கொண்டுள்ளன. இந்த வாசகம்தான் தற்போது தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
இன்று மாலை 5 மணிக்கு டைட்டில் வெளியாகவுள்ளது. வாரிசு படத்தின் சூட்டிங் நடைபெற்ற போதே தளபதி 67 படத்தின் அப்டேட்களுக்காக தொடர்ந்து வெயிட் செய்துவந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்த இந்த அப்டேட்கள் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. தளபதி ரசிகர்களுக்கு போதும் போதும் என்ற அளவிற்கு அடுத்தடுத்த அப்டேட்களை லோகேஷ் கொடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











