தளபதி பிறந்தநாள்.. காமன் டிபிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #ThalapathyBdayCDP

சென்னை: நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், #ThalapathyBdayCDP ஹாஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்.. ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும், முடிந்த அளவு நலப்பணிகளை செய்யுங்கள் என்றும் நடிகர் விஜய் அறிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விஜய் பிறந்தநாளை கொண்டாட தொடங்கி விட்டனர்.

அடிக்கிற அடியில

அடிக்கிற அடியில

தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபியை இன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். காலை முதலே விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கி தங்களின் அட்டென்டன்ஸை போட்டு வருகின்றனர். அடிக்கிற அடியில அட தவிலு கிழிஞ்சு தொங்கட்டும், அடிச்சது யாரு வெறும் சத்தம் மட்டும் கேட்கட்டும் என மெர்சல் பாடல் வரிகளை போட்டு மாஸ் காட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

8 வருஷம்

8 வருஷம்

கடந்த 8 வருடங்களாக நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு உருவான காமன் டிபி கலெக்‌ஷனை போட்டு, இன்று வெளியாகவுள்ள காமன் டிபி எந்தளவுக்கு வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர். காமன் டிபியை எடிட் செய்து வரும் ஷைனு மாஷையும் டேக் செய்துள்ளனர்.

வெறித்தனம்

வெறித்தனம்

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் அல்லது அப்டேட்டும் சீக்கிரமே வரும் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை காண ரசிகர்கள் ஆவலோடு இருப்பதை இது போன்ற மாஸாக எடிட் செய்யப்பட்ட போட்டோக்கள் வாயிலாக அனைவரும் அறிந்து கொள்ள முடிகிறது.

எமனை மிஞ்ச

எமனை மிஞ்ச

ஏகப்பட்ட பாடல் வரிகள், பஞ்ச் வசனங்கள் என இந்த ஹாஷ்டேக் முழுவதும் தளபதி தரிசனமாகவே தெறிக்க விட்டு வருகிறது. "எமனை மிஞ்ச சிவன் டா.. தளபதியை மிஞ்ச எவன் டா" என சில தீவிர ரசிகர்கள் வேற லெவல் எடிட்டிங் மற்றும் வாசகங்களுடன் தங்களின் உற்சாகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெயிட்டிங்

வெயிட்டிங்

இன்று மாலை 6.30 மணிக்கு தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களால் தளபதி விஜய் பிறந்தநாள் காமன் டிபி வெளியிடப்பட உள்ளது. இந்த முறை காமன் டிபி என்ன டிசைனில் எப்படி இருக்கும் என்பதை பார்க்கவும், அதனை வைரலாக்கி பல புதிய சாதனைகளையும் படைக்க விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்.

கொண்டாட்ட நாள்

கொண்டாட்ட நாள்

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போயிருப்பதால், விஜய் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது போல ஆகி இருந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காமன் டிபியை வெளியிட்டு அடுத்த 9 நாளுக்கும் டிவிட்டரை தெறிக்கவிட்டு கொண்டாட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

டார்கெட் முக்கியம் பிகிலே

டார்கெட் முக்கியம் பிகிலே

இதுவரை இந்தியளவில் டிரெண்டான பிறந்தநாள் காமன் டிபி என்றால் அது ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் காமன் டிபி தான். 5.2 மில்லியனை கடந்து முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் தல அஜித்தின் பிறந்தநாள் டிபி 4.6 மில்லியனில் இருக்கிறது. இன்று வெளியாகப் போகும் விஜய்யின் பிறந்தநாள் காமன் டிபியை முதலிடத்தில் கொண்டு வர ரசிகர்கள் முனைப்போடு டார்கெட் முக்கியம் பிகிலே என காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X