ஏ சண்டக்காரி.. இறுதிச்சுற்று முதல் தலைவர் 170 வரை.. ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சென்னை: MMA ஃபைட்டராக இருந்த ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. நாடு முழுவதும் பிரபலமானார்.

அதன் பின்னர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக சிவலிங்கா என பல படங்களில் நடித்து வருகிறார்.

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நூடுல்ஸ் மண்டை என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரித்திகா சிங் தற்போது தலைவர் 170வது படத்தில் நடித்து வருகிறார்.

ரித்திகா சிங் பிறந்தநாள்: 1994ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மும்பையில் பிறந்த ரித்திகா மோகன் சிங் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மும்பையில் படித்து வளர்ந்த ரித்திகா சிங் கடந்த 2009ல் ஏசியன் இண்டோர் கேம்ஸில் கலந்து கொண்டு கலக்கினார். 2016ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் எழில் மதி எனும் கதாபாத்திரத்தில் நடித்த அவர் ஹீரோயினாக தனது புதிய பயணத்தை தொடங்கினார்.

Thalivar 170 actress Ritika Singh turns 29 today here we look about her networth

இறுதிச்சுற்று டு தலைவர் 170: முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ரித்திகா சிங் தொடர்ந்து சிறந்த நடிப்பைக் கொடுத்து சினிமாவில் தூள் கிளப்பி வருகிறார். இந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கோதா படத்தில் இடம்பெற்ற கலாபக்காரா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். தமிழில் விஜய் ஆண்டனியுடன் இவர் இணைந்து நடித்த கொலை படம் சரியாக போகவில்லை. இந்நிலையில், அடுத்து தலைவர் 170 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். சமீபத்தில், தலைவர் 170 படப்பிடிப்பு தளத்தில் இவருக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சொத்து மதிப்பு: தலைவர் 170வது படத்தில் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில படங்களிலேயே நடித்துள்ள இவர் இதுவரை 8 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக உள்ளார் எனக் கூறுகின்றனர். போல்டான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் வொர்க்கவுட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X