தள்ளிப்போகாதே "இதையா இதையா" பாடல் ப்ரோமோ வெளியானது!
சென்னை: இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தள்ளி போகாதே
அனுபமா பரமேஸ்வரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார்
திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள தள்ளிப்போகாதே படத்திலிருந்து இதையா இதையா பாடல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக கொடி
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப்பொழுது தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தமிழுக்கு மிக தாமதமாகவே அறிமுகம் செய்யப்பட்ட இவர் தனுஷுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்தார். கொடி மிகப் பெரிய வெற்றி பெற்ற போதிலும் அனுபமாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை

இரண்டாவது முறையாக கூட்டணி
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து உள்ளார். நடிகர் அதர்வா இதில் ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குனர் ஆர் கண்ணன் இப்படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். அதர்வா மற்றும் ஆர் கண்ணன் கூட்டணி ஏற்கனவே பூமராங் என்ற படத்தில் இணைந்து இப்பொழுது இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைகிறது

ரிலீஸ் தேதி தாமதமானது
தெலுங்கில் நடிகர் நனியின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நின்னுக்கோரி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது படப்பிடிப்பு பணிகள் மொத்தமும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள தள்ளிப்போகாதே முதலில் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தாமதமானது. இந்த நிலையில் இறுதியாக டிசம்பர் 3ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக
காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள தள்ளிப்போகாதேவில் வேலையில்லா பட்டதாரி பட புகழ் அமிதேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் வெற்றி பெற்றது போலவே இந்த திரைப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த தள்ளி போகாதே ரிலீஸ் மீண்டும் அறிவிக்கப்படாத தேதியுடன் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதையா இதையா பாடல் ப்ரோமோ
இந்த நிலையில் தள்ளிப்போகாதே படத்திலிருந்து இதையா இதையா என்ற பாடல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. கபிலன் வைரமுத்துவின் வரிகளில் , கோபி சுந்தர் இசையில் , சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார் . அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இடையே ஏற்படும் சிறிய பிரிவை உணர்த்தும் வகையில் இப்பாடல் உருவாகி உள்ளது. மனதை மென்மையாக்கும் இதையா இதையா பாடலின் ப்ரோமோ காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











