அதர்வாவின் தள்ளிப்போகாதே ரிலீஸ் தேதி அறிவிப்பு !

சென்னை : நடிகர் அதர்வா நடிக்கும் தள்ளிப்போகாதே திரைப்படம் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

Recommended Video

ATHARVAA ROMANCE பண்ணா பிடிக்கும் | ACTRESS DARSHINI & SAMEER CHAT | FILMIBEAT TAMIL

இத்திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், இதில், ஆடுகளம் நரேன் காளி வெங்கட் ஜெகன் அமிதாஷ் பிரதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தள்ளிப்போகாதே

தள்ளிப்போகாதே

தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக் தள்ளிப் போகாதே படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். கொடி படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை வெற்ற அனுபமா பரமேஸ்வரன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இத்திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அனுபமா ஒரு பரதநாட்டிய கலைஞராக நடித்துள்ளார்.

ரொமான்டிக்

ரொமான்டிக்

கௌதம் வாசுதேவ் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் வரும் தள்ளி போகாதே பாடல் இப்படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. ரொமான்டிக் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகி உள்ளது. மேலும், அஜர்பைஜான் நாட்டில் ஜிசி என்ற சிகரத்தின் மீது 70 அடி உயரத்திற்கு மலையேற்றம் செய்து இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்கப்பட்டுள்ளன.

முக்கிய கேரக்டரில் பலர்

முக்கிய கேரக்டரில் பலர்

தள்ளி போகாதே படத்தின் ஆடுகளம் புகழ் நரேன், ஜெகன், காளி வெங்கட் மற்றும் வித்யுல்லேகா ராமன் ஆகியோர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் அமிதாஷ் பிரதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் . மேலும், நின்னு கோரி படத்துக்கு இசையமைத்த கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவில், எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ்.எக்ஸ் உடன் இணைந்து கண்ணன் அவர்களே தயாரித்துள்ளார்.

டிசம்பர் 3ந் தேதி

டிசம்பர் 3ந் தேதி

பலமுறை இத்திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி 'தள்ளிப்போகாதே'திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில், அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது. இந்நிலையில், இத்திரைப்படம், டிசம்பர் 3ந் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X