Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கர்ப்பத்தில் உள்ள வாரிசு கூட ‘ரஞ்சிதமே’ பாட்டுக்கு டான்ஸ் ஆடுதா? நெகிழ்ந்து போன தமன்!
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு பாடல் கேட்டு கர்ப்பத்தில் உள்ள குழந்தை எட்டி உதைப்பதாக கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு படம் கடந்த ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
3 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து பொங்கல் வின்னராக மாறி உள்ள வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Varisu Hits 100 Crores: அடேங்கப்பா.. மின்னல் வேகத்தில் 100 கோடி கிளப்பில் இணைந்த விஜய்யின் வாரிசு!

குழந்தைகள் முதல் பெரியவங்க வரை
நடிகர் விஜய்யின் பட பாடல்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவங்க வரை ஆட்டம் போடுவது வழக்கமான ஒன்று தான். ஒரு வயது கூட ஆகாத குழந்தைகளும் அரபிக் குத்து, ரஞ்சிதமே பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வரும் நிலையில், அதை விட சூப்பரான ஒரு விஷயம் நடந்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

குடும்பங்களுக்காக
மாஸ்டர், பீஸ்ட் படங்கள் எல்லாம் ஆக்ஷன் சரவெடியாக இளைஞர்களை கவரும் வண்ணம் வெளியான நிலையில், குடும்பங்களுக்காக வாரிசு படத்தில் நடிக்க சம்மதித்தார் நடிகர் விஜய். அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் பொறாமை மற்றும் போட்டி காரணமாக குடும்பம் உடைவதும் அதை விஜய் எப்படி சரி செய்கிறார் என்பதும் தான் வாரிசு படத்தின் கதை.

அப்பா நியாபகம் வந்துடுச்சு
வாரிசு படத்தை பார்த்து விட்டு இசையமைப்பாளர் தமன் கண்ணீர் விட்டு அழுதார். மேலும், ரசிகர் ஒருவர் அண்ணா எனக்கு அப்பா நியாபகம் வந்துடுச்சு.. என் அப்பா இறந்துட்டாரு என பேசிய பொதுமக்கள் விமர்சன வீடியோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், இன்னொரு வீடியோ அந்த வரிசையில் தற்போது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
|
கர்ப்பத்திலேயே டான்ஸ்
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் உள்ள குழந்தை ரியாக்ட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. மற்ற எந்த பாடல்களுக்கும் இப்படி ரியாக்ட் செய்யவில்லை என்றும் ரஞ்சிதமே பாடல் போட்டால் குழந்தை எட்டி உதைப்பதாக அந்த அம்மா சொல்லும் நெகிழ்ச்சியான பேச்சு விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமன் நெகிழ்ச்சி
தமன் ப்ரோ இந்த வீடியோவை பாருங்க என அவருக்கு டேக் செய்த நிலையில், அந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்து போன இசையமைப்பாளர் தமன் இதுவொரு டிவைன் அனுபவம் என சொல்லி விட்டு எவ்ளோ க்யூட்டா இருக்கு என உருகிப் போயுள்ளார். தமனின் இசை வாரிசு படத்துக்கு பெரும் பலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.