Thaman: வயிறு எரியுதா.. ஃப்ரீயா மோரும் வாழைப்பழமும் தரேன் வாங்க.. தமன் போட்ட பதிவு.. பின்னணி என்ன?
ஹைதராபாத்: இசையமைப்பாளர் தமன் தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான இசையமைப்பாளராக உள்ள நிலையில், திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக சில தயாரிப்பாளர்களை சாடி உள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஹயாத் ஹோட்டலில் சூட் ரூம் எடுத்துத் தங்கி 40 லட்சம் ரூபாய் பில்லை தயாரிப்பாளர் ஒருவரிடம் தமன் நீட்டியதாக புகார் ஒன்று கிளம்பி உள்ளது.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழைப்பழத்தின் போட்டோவையும் வயிறு எரியுதா என் அலுவலகத்துக்கு வாங்க ஃப்ரீயா மோர் தருகிறேன் என படு நக்கலாக போஸ்ட் ஒன்றை போட்டு பஞ்சாயத்தைக் கூட்டி உள்ளார்.

40 லட்சம் பில்: டோலிவுட்டில் 5க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் நட்சத்திர ஹோட்டலான ஹயாத்தில் சூட் ரூமை எடுத்து தங்கி வருகிறாராம். இதற்காக அவர் 40 லட்சம் செலவானதாக தயாரிப்பாளர் ஒருவருக்கு பில் நீட்டிய நிலையில், அவர் கடுப்பாகி விட்டாராம்.
பல படங்களுக்கு இசையமைக்கிறீங்க மொத்த பில்லையும் ஏன் என் தலைமீது கட்டுறீங்க என தயாரிப்பாளர் கேள்வி எழுப்பியது தான் தற்போது டோலிவுட்டில் அவருக்கு சிக்கலை உண்டாக்கி உள்ளதாக கூறுகின்றனர்.
வாழைப்பழம் போஸ்ட்: இதன் காரணமாக தமனை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். பாய்ஸ் படத்தில் நடித்த தமன் மல்லி மல்லி எனும் தெலுங்கு படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழில், சிந்தனை செய் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்தார்.
முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ள தமன் கடந்த ஆண்டு இறுதியில் பிரின்ஸ், இந்த ஆண்டு வாரிசு, வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், வயிறு எரியுதுன்னா வாழைப்பழம் சாப்பிடுங்கன்னு ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
மோர் ஃபிரியா தரேன்: மேலும், நாளை முதல் என் ஸ்டூடியோவில் இலவசமாக மோர் தருகிறேன். மோர் குடித்தாலும் வயிறு எரிச்சல் குறையும் என பதிவிட்டுள்ளார்.
இது ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கான போஸ்ட்டா? அல்லது தமனை திட்டிய தயாரிப்பாளருக்கான போஸ்ட்டா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தமனின் இந்த பதிவு ரொம்பவே திமிராக உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன.
மகேஷ் பாபு படத்தில் இருந்து நீக்கம்: மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திற்கு தமன் இசையமைத்து வந்த நிலையில், அவர் மீது எழுந்த பஞ்சாயத்து காரணமாக மகேஷ் பாபு படத்தில் இருந்து நீக்கி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ப்ரோ, ராப்போ 20, பகவந்த் கேசரி மற்றும் குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வந்த தமன் தற்போது மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகும்பட்சத்தில்,
அனிருத் அல்லது ஜிவி பிரகாஷ் இருவரில் ஒருவர் அந்த படத்துக்கு இசையமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











