தென்னை மரச் சின்னத்துல ஒரு குத்து.. பனை மரச் சின்னத்துல ஒரு குத்து.. தமனை வச்சு செய்யும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகர் தான் என வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் இசை வெளியீட்டு விழாவில் ஆனந்தக் கண்ணீர் விட்டுப் பேசியது விஜய் ரசிகர்களை ரொம்பவே உலுக்கியது. அண்ணன் பாசத்துல நம்மள மிஞ்சிடுவான் போல என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வந்தனர்.

ஆனால், எல்லா முன்னணி பிரபலங்களிடமும் இதே வார்த்தையை தான் இசையமைப்பாளர் தமன் கூறி வருவதாக அவருடைய ட்வீட்களை எல்லாம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு அஜித் ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

இசையமைப்பாளர் தமன் இப்படி மோசம் பண்ணிட்டாரே என விஜய் ரசிகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமன் உருக்கம்

தமன் உருக்கம்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ஒஸ்தி படத்துக்கு இசையமைத்த உடனே விஜய் அண்ணா என்னை அழைத்துப் பாராட்டினார். கூடிய விரைவிலேயே இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்றார். இந்நிலையில், வாரிசு படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததே பெரிய மகிழ்ச்சி.. நான் விஜய் அண்ணாவோட தீவிரமான ரசிகன் என உருகி பேசி விஜய் ரசிகர்களையும் உருக வைத்து விட்டார்.

மிரட்டிய மகன்

மிரட்டிய மகன்

என்னை விட என் மகன் தீவிர விஜய் ரசிகர், வாரிசு படத்துக்கு இசையமைக்கப் போகிறேன் என்று சொன்னதும் அப்பா மானத்தை காப்பாத்திடுப்பா.. இல்லைனா பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க என மிரட்டியே விட்டான் என்றார். பாட்டு எல்லாம் கேட்ட பின்னர், கலக்கிட்டப்பா என்று சொன்னான் என மேடையில் தமன் பேசி கைதட்டல்களை அள்ளினார்.

சிரஞ்சீவ், அஜித், விஜய், பவன் கல்யாண்

சிரஞ்சீவ், அஜித், விஜய், பவன் கல்யாண்

சிரஞ்சீவி படத்துக்கு இசையமைக்கும் போது தமன் தான் சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகர் என ட்வீட் போட்டுள்ளார். பவன் கல்யாண் படத்துக்கு இசையமைக்கும் போது பவன் கல்யாணின் பிக்கஸ்ட் ஃபேன் என ட்வீட் போட்டுள்ளார். தல அஜித்துடைய மிகப்பெரிய ரசிகன் என்றும் கூறிய தமன் தற்போது நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என பேசி உள்ளார்.

அங்கவொரு குத்து இங்கவொரு குத்து

அங்கவொரு குத்து இங்கவொரு குத்து


தமன் இப்படி ஒவ்வொரு முறையும் எந்த படத்துக்கு இசையமைக்கிறாரோ அந்த நடிகரின் தீவிர ரசிகர் என சொல்வதை பார்த்த ரசிகர்கள் தென்னை மரச் சின்னத்தில் ஒரு குத்து பனை மரச் சின்னத்தில் ஒரு குத்தா? என்றும் ஆம்பள சமந்தா என்றும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X