வாரிசு ஃபர்ஸ் சிங்கிள் அப்டேட் கொடுத்த தமன்… விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மரண மாஸ்
சென்னை: விஜய் தற்போது வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பதை படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்நிலையில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தமன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அப்டேட் கொடுத்துள்ளார்.

விஜய்யின் வாரிசு
வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் நேரடியாக தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கத்து. விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, முக்கியமான கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். வாரிசு படத்தில் சரத்குமாரின் மூன்றாவது மகனாக விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். முதன்முறையாக விஜய்யுடன் தமன் கூட்டணி வைத்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது விஜய்யின் யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாட;லின் ரீமிக்ஸாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. விஜய்யும் சிம்ரனும் அல்டிமேட்டாக ஆட்டம் போட்ட ஆல்தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸை கேக்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை தமன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்து ரசிகர்களுக்கு லீட் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில், இசையமைப்பாளர் தமனின் இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகிறது. அதில் 'தீபாவளி' என பதிவிட்டு, ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துள்ளார். தமனின் இந்த அப்டேட் விஜய்யின் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக தான் இருக்கும் என ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் அபிஸியலாக வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மரண மாஸ் தான்
தமன் இசையில் சிவகார்த்திகேயேன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் பாடல்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல், தெலுங்கிலும் தமன் இசையில் வெளியான சிரஞ்சீவியின் 'காட்ஃபாடதர்' திரைப்படம், 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. இந்நிலையில், தற்போது விஜய்யின் வாரிசு ஃபார்ஸ் சிங்கிள் பற்றிய அப்டேட், சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











