டிஎஸ்பி ஏமாத்திட்டாராம்... மகேஷ்பாபு படத்துக்கு மீண்டும் இசை அமைக்கிறார் தமன்

By

சென்னை: மகேஷ்பாபு ஹிரோவாக நடிக்கும் அடுத்தப் படத்துக்கு தமன் இசை அமைக்க உள்ளார்.

தமிழில் ஈரம், காஞ்சனா, வந்தான் வென்றான், ஒஸ்தி, காதலில் சொதப்புவது எப்படி? தில்லுக்குத் துட்டு, சிவலிங்கா உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர் தமன்.

தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இவர் தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு நடித்த தூக்குடு, பிசினஸ்மேன் படங்களுக்கும் இசை அமைத்திருந்தார்.

தோழா இயக்குனர்

தோழா இயக்குனர்

இப்போது அவரது அடுத்தப் படத்துக்கும் இசை அமைக்க இருக்கிறார். இந்தப் படத்தை நாகர்ஜுனா, கார்த்தி நடித்த 'தோழா'வை இயக்கிய வம்சி பைடிபள்ளி இயக்குகிறார்.

தேவிஶ்ரீ பிரசாத்

தேவிஶ்ரீ பிரசாத்

மகேஷ்பாபு நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன படம், 'சரிலேரு நீக்கெவ்வரு'. இந்தப் படத்துக்கு டிஎஸ்பி என்கிற தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். வழக்கமாகக் குத்துப்பாடல்களில் மிரட்டும் டிஎஸ்பி, இந்தப் படத்தில் பாடல்களை ஹிட் பண்ணவில்லையாம்.

அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன்

அதோடு மகேஷ்பாபு படத்துக்கு மறுநாள் வெளியான அல்லு அர்ஜூனின், அல வைகுந்தபுரம்லு படத்துக்கு தமன் இசை அமைத்திருந்தார். இதன் பாடல்களும் படமும் ஹிட். இதனால் மகேஷ்பாபுவின் அடுத்த படத்துக்கு தமனை இசை அமைப்பாளராகப் படக்குழு ஒப்பந்தம் செய்ய உள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

அதிரடி ஆக்‌ஷன் படமான இதன் படப்பிடிப்பு மற்றும் டெக்னீஷியன்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. மகேஷ்பாபுவின் 27 வது படமான இதற்கு, #SSMB27 என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X