’வாரிசு’ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தமன் கொடுத்த அப்டேட்: இதுக்கு தான விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்!
விசாகப்பட்டினம்: விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'வாரிசு' படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.
விறுவிப்பாக சூட்டிங் நடைபெற்று வரும் 'வாரிசு' அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தமன் ஷேர் செய்துள்ள ஒரு போட்டோ, ரசிகர்களுக்கு ரகசியமாக ஒரு அப்டேட்டை கூறியுள்ளது.

பீஸ்ட் டூ வாரிசு
விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான 'பீஸ்ட்' படத்திற்கு அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் கலவையான விமர்சனங்களை பெற்றதுடன், ரசிகர்களையும் ஏமாற்றியது. இதனால் இயக்குநர் நெல்சன், விஜய் ரசிகர்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து டோலிவுட் இயக்குநர் வம்சி பைடிபல்லியுடன் கூட்டணி வைத்த விஜய், 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யுடன் முதன்முறையாக இணைந்த பிரபலங்கள்
'வாரிசு' படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி வைத்தவர்கள் அதிகம். இயக்குநர் வம்சி பைடிபல்லி,. நாயகி ராஷ்மிகா மந்தானா, இசையமைப்பாளர் தமன், நடிகர்கள் ஷாம், சரத்குமார் என பலரும், விஜய் படத்தில் முதன்முறையாக கமிட் ஆகியுள்ளனர். இதனால், இந்தப் படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

வாரிசு ஃபேமிலி ட்ராமா?
'விஜய் 66' என சூட்டிங்கை தொடங்கிய படக்குழு, படத்தின் டைட்டில் 'வாரிசு' என்பதுடன், விஜய்யின் அசத்தலான போஸ்டர்களையும் வெளியிட்டது. ஸ்டைலிஷான விஜய்யின் போஸ்டர்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும், 'வாரிசு' குடும்ப உறவுகளை பின்னணியாக வைத்து ஃபேமிலி சென்டிமெண்டலாக உருவாகிறது என சொல்லப்பட்டது.

அதிரடிக்கு தயாரான தமன்
விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தமன், அவருக்காக மஜாவான பாடல்களை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதில், விஜய்யின் ஆல்டைம் ஹிட்டான 'ஆல்தோட்ட பூபதி' பாடல் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தமனும் இப்போது தான் முதன்முறையாக தேசிய விருதை வென்றுள்ளார்.

தமன் கொடுத்த ஆக்சன் அப்டேட்
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடக்கும் வாரிசு படத்தின் சூட்டிங்காக விஜய் விமான நிலையம் சென்ற வீடியோ வைரலாகி இருந்தது. இப்போது அதே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு இசையமைப்பாளர் தமனும் சென்றுள்ளார். விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் துறைமுகத்தில் இருந்து அவர் எடுத்துள்ள போட்டோ புது தகவலை சொல்லாமல் சொல்கிறது.

விஜய் ரசிகர்கள் உற்சாகம்
ஃபேமிலி டிராமாவாக உருவாகும் 'வாரிசு' படத்தின் சூட்டிங், ஹார்பரில் நடத்த அவசியம் இல்லை. அப்படியென்றால், விஜய்யின் ஆக்சன் காட்சிகளுக்காக ஹார்பாரில் சூட்டிங் நடந்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அப்போ வாரிசு மூவியில் பயங்கரமான சண்டைக் காட்சிகள் இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











