Thaman: மியூசிக் கம்போஸ் பண்ண ஸ்டார் ஹோட்டலில் ரூம்... தமன் போட்ட ட்யூனில் காலியான தயாரிப்பாளர்

சென்னை: ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமானவர் தமன்.

பாய்ஸ் படத்தில் டிரம்ஸ் இசைத்து கேர்ள் பிரண்ட் தேடிய தமன், இப்போது ஒரிஜினலாகவே இசையமைப்பாளர் ஆகிவிட்டார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் சொந்தமாக ஸ்டுடியோ இல்லாத தமன் மீது பரிதாபப்பட்ட தயாரிப்பாளருக்கு தலை வலியை பரிசாக கொடுத்துள்ளாராம்.

 Thaman shocked the producer who booked a room for music composing

தயாரிப்பாளரை தெறித்து ஓடவிட்ட தமன்: பாய்ஸ் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் தமன். டிரம்ஸ் வாசித்து மாஸ் காட்டியவர் இப்போது ரியல் மியூசிக் டைரக்டராக கெத்து காட்டுகிறார். 2009ம் ஆண்டு வெளியான மல்லி மல்லி என்ற தெலுங்குப் படத்தில் தான் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழி படங்களில் இசையமைத்து வருகிறார்.

தமிழில் மம்பட்டியான், காஞ்சானா, ஒஸ்தி போன்ற படங்கள் தமனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கிக் கொடுத்தது. ஆரம்பத்தில் வெரைட்டியாக இசையமைத்து வந்த தமன், மாஸ் ஹீரோக்களின் படங்களில் கமிட்டானதும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிவிட்டார். "ஏணி சின்னத்துல ஒரு குத்து... தென்னை மர சின்னத்துல ஒரு குத்து" என்ற காமெடியைப் போல ஒரே ட்யூனில் பல வித்தைகளை காட்டி வருகிறார்.

அத்தி பூத்தாற் போல அவ்வப்போது சூப்பர் பாடல்களை கொடுத்தாலும் தமனின் இசையில் ட்ரம்ஸ் மட்டுமே அடிக்கடி அலறுகிறது. இந்த இசையை கேட்டு வியந்த விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரும் தங்களது வாரிசு, பிரின்ஸ் படங்களுக்கு இசையமைக்க வைத்து அழகுப் பார்த்தனர். இப்படி தொடர்ந்து தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்து வரும் தமனுக்கு, சென்னையில் சொந்தமாக ஸ்டுடியோ இல்லை என சொல்லப்படுகிறது.

 Thaman shocked the producer who booked a room for music composing

இதனால் ஒருமுறை தமன் சென்னை வந்து இசையமைக்க வேண்டும் என்பதால், பார்க் ஹயாத் விடுதியில் அவருக்கு ரூம் புக் செய்து கொடுத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர். ஆனால், தமன் தனது மொத்த பரிவாரங்களையும் கூட்டி வந்து ஏராளமான அறைகளை எடுத்துக்கொண்டாராம். கடைசியாக ஏற்கனவே போட்ட ட்யூனை கலர் ஜெராக்ஸ் எடுத்து, அதனை ஒரு பாடலாக கம்போஸ் செய்துகொடுத்துள்ளார் தமன்.

இருந்தாலும் பரவாயில்லை என தமன் கொடுத்த ட்யூனையே வாங்கிக்கொண்ட தயாரிப்பாளர், அடுத்த சம்பவத்தில் தான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம். தமன் ஹோட்டலை காலி செய்யும் போது மொத்தமாக 40 லட்சம் வரை பில் வந்துள்ளதாம். அதனைப் பார்த்த அடுத்த நொடியே தலைசுற்றி நெஞ்சில் கை வைத்து உட்கார்ந்துவிட்டாரம். அதன்பிறகு தமன் ரூம் கேட்டால் தலையை எந்தப் பக்கமும் திருப்பாமல் செங்கோல் போல வலம் வருகிறாராம் அந்த தயாரிப்பாளர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X