தெலுங்கு லூசிஃபர்-க்கு இவர்தான் இசை... அப்போ எல்லா பாட்டும் சூப்பர் ஹிட்டு தான் !
ஹைதராபாத் : தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கை இயக்கி நடிகர் ராம் சரணுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் ஆனார் மோகன் ராஜா.
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியை வைத்து தற்போது மோகன் ராஜா இயக்கி வருகிறார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் சஞ்சீவி யின் 153வது படமாக உருவாகும் இப்படத்திற்கு பிரபல இளம் இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.

மோகன்லால் ஹீரோவாக
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜ் தமிழிலும் சில படங்களில் நடித்து இங்கும் பிரபலமாக உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு லூசிஃபர் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். பல மர்ம முடிச்சுகள் உடன் அரசியல் கதை களத்தை கொண்டு உருவான லூசிஃபர் திரைப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருக்க மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

லூசிஃபர் தெலுங்கு ரீமேக்
2019-ல் வெளியாகி கேரளாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த லூசிஃபர் இப்பொழுது தெலுங்கில் உருவாகி வருகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடர்ந்து ரீமேக் படங்களை இயக்கி வந்த மோகன் ராஜா இப்பொழுது தன்னுடைய சொந்த கதைகளை இயக்கி பெயர் பெற்று வரும் நிலையில் மீண்டும் ரீமேக் பக்கம் திரும்பி லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார்.

நயன்தாரா
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக் துருவா படத்தை இயக்கி ராம் சரணுக்கு மிகவும் நெருக்கமான மோகன் ராஜா தெலுங்கில் வெளியான பல திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து ஹிட் கொடுத்தவர். லூசிஃபர் தெலுங்கு பதிப்பின் உரிமையை கைப்பற்றிய ராம்சரண் அதை தயாரிக்க அப்பா சிரஞ்சீவியின் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது. நயன்தாரா, சோனாக்ஷி சின்ஹா, வருண் தேஜ் போன்ற பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பாடல் பணிகள்
இந்தநிலையில் லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கிற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் மோகன் ராஜா தமன் இருவரும் ஸ்டூடியோவில் நின்றபடி எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிரஞ்சீவி 153வது படத்தின் பாடல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார். சமீபகாலமாகவே தமன் இசையமைத்து வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களும் அதே வரிசையில் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











