கிளாமர் லுங்கி.. சட்டை கையில பூ.. பக்கா லோக்கல்.. செம கெத்து காட்டிய தமன்னா !

சென்னை: லுங்கி, சட்டை மற்றும் கையில் பூ கலக்கும் தமன்னா வைரல் ஆகும் புகைப்படங்கள்.

தென்னிந்திய சினிமாவில் மெழுகு சிலை தான் தமன்னா. இவருக்கு பல நூறு ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.

தனது பதினைந்தாவது வயதில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. பின் சிறிது காலம் கழித்து தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார் மற்றும் தமிழில் கேடி என்ற படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் தமன்னா. இந்த இரண்டு படங்களும் சுமார் ஆகவே இருந்தது.

கல்லூரி

கல்லூரி

பின் இரண்டு மொழி ரசிகர்களுக்கு நன்கு அவரை அறிய வைத்த படம் தான் பாலாஜி சக்திவேலின் தமிழில் கல்லூரி மற்றும் தெலுங்கில் ஹாப்பி டேஸ். இப்படம் மிகவும் பேசப்பட்டது மற்றும் தமன்னாவின் நடிப்பு பிரபலமானது. இப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

பையா

பையா

பின்னர் தமிழில் வெளியான கண்டேன் காதலை படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவரின் திரை வாழ்க்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய்யுடன் சுறா , ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி போன்ற படங்களில் நடித்தார். இவ்விரண்டு படங்களும் சுமார் ஆகவே இவருக்கு அமைந்தது. அதே வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படம் இவருக்கு வெற்றியை தேடிதந்தது.

 சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட்

ஒரே ஆண்டில் தெலுங்கு மற்றும் தமிழ்ல் திரையுலகில் ஆறு படங்களில் நடித்தார் தமன்னா, அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக இரண்டு திரையுலகிலும் முன்னணி கதாநாயகி ஆனார் தமன்னா. பின் தல அஜீத் உடன் வீரம் படத்தில் நடித்தார் இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுதந்தது.

 வருடத்திற்கு 1

வருடத்திற்கு 1

2015 ஆம் ஆண்டு வெளியாகி இந்திய முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் நடித்தார். அவந்திகா எனும் அந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல கதாபாத்திரமாக அமைந்தது. இதனை தொடர்ந்து அடுத்த வருடமே தமிழில் தோழா, தர்மதுரை, தேவி படங்களில் நடித்து பிரபலமாகினார் தமன்னா. இதனை தொடர்ந்து தமிழில் அதிகம் படங்களில் நடிப்பதில்லை வருடத்திற்கு ஒரு படம் என்று தான் நடிக்கிறார் தமன்னா.

 கவர்ச்சி லுங்கி

கவர்ச்சி லுங்கி

தற்போது பல நடிகைகளை போல அவருடைய போட்டோஷுட் புகைப்படங்களும் ஆன்லைனில் வைரலாகி வருகின்றன. லுங்கி கட்டி கொண்டு சட்டையை மடித்து கொண்டு கையில் பூ மற்றும் ஒரு கோப்பையுடன் ஒரு பக்கா லோக்கல் ஆளாக மாறியுள்ளார் தமன்னா. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து சொக்கிப்போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X