பாவனியை பிடிக்கவே பிடிக்காது.. பட்டென போட்டுடைத்த தாமரை.. அப்புறம் ஏன் கட்டிப்புடிக்கிறீங்க?
சென்னை: பாவனியை தனக்கு பிடிக்கவே பிடிக்காது என தாமரை செல்வி முகத்தில் அறைந்தாற் போல சொல்லி விட்டார்.
ராஜுவின் குழுவில் ஒருவராக ஐக்கியமாகி உள்ள தாமரை செல்விக்கும் பாவனிக்கும் ஏற்கனவே அந்த காயின் மேட்டரில் இருந்தே ஆகாது.
பிடிக்காது என யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்களிடம் ஏன் அப்படி சொல்றீங்க என கேட்டே பஞ்சாயத்து செய்து வருகிறார் பாவனி.

பாவனிக்கு பழி
தாமரை செல்வியின் காயினை உடை மாற்றும் அறையில் அசால்ட்டாக எடுக்க சுருதிக்கு உதவியவர் பாவனி தான். அந்த பிரச்சனையில் இருந்தே தாமரை மற்றும் ராஜுவுக்கு பாவனியை கண்டாலே ஆகாமல் போய் விட்டது. ஆனாலும், கேம் விளையாடும் போதெல்லாம் பாவனியுடன் பேசி பழகி வருகிறார் தாமரை.

பாவனியை பிடிக்காது
கேம் ஆடத்தான் வந்தேன் என்றும் தனக்கு பாவனியை பிடிக்காது என்றும் தாமரை செல்வி உண்மையா? பொய்யா? கேமில் கூறியதை கேட்ட பாவனி அப்செட் ஆகி விட்டார். என்னை உங்களுக்கு ஏன் பிடிக்காது என கேள்வி கேட்க வெடித்தது மற்றொரு சண்டை.

அப்புறம் ஏன் கட்டிப்புடிக்கிறீங்க
என்னை உங்களுக்கு பிடிக்காதுன்னு வெளிப்படையா இப்போ சொல்றீங்க அப்புறம் ஏன் காலையில வந்து கட்டிப்புடிக்கிறீங்க என பாயின்ட் பிடித்து பாவனி பேச பம்ம ஆரம்பித்த தாமரை கேமுன்னா அப்படியெல்லாம் பண்ணத்தான் செய்யணும். ஆனால், உன்னைய எனக்கு சுத்தமா பிடிக்காதுனு சொல்லி நோஸ் கட் செய்து விட்டார்.

புடிச்சா உண்மையா இருப்பேன்
எங்கிட்ட நீங்க அப்புறம் வந்து வந்து பேசக் கூடாது என பாவனி தாமரைக்கு எதிராக திரும்ப எங்கிட்ட உண்மையா இருந்தா நானும் பாசமா பழகுவேன், உண்மையா இருப்பேன் என தாமரை செல்வி சொல்ல நல்லா கேம் ஆடுறீங்க தாமரை என கடுப்புடனே பாராட்டினார் பாவனி.

விட மாட்டேங்குறாரே
பிடிக்கவில்லை என சொல்லும் நபருடன் ஏன் வான்ட்டட்டாக சென்று பாவனி நட்பு வைத்துக் கொள்ள விரும்புகிறார் என்று பாவனி ஆர்மியினரே கமெண்ட் அடித்து கேட்டு வருகின்றனர். ராஜு, அக்ஷரா, வருண் மற்றும் தாமரை உள்ளிட்ட அந்த அணிக்கே பாவனியை பிடிக்காது என்பது தெளிவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











