கட்டாயப்படுத்தி காமெடி பண்ண சொல்றா சார்.. கமலிடம் தாமரையை கோர்த்து விட்ட ராஜு பாய்!
சென்னை: கேப்டனாக இந்த வாரம் எப்படி போச்சு தாமரை யாரெல்லாம் உங்க பேச்சை கேட்டாங்க, யாரெல்லாம் கேட்கல என கமல் ஆரம்பிக்க ராஜு மட்டும் தான் சார் பேச்சை கேட்கல என தாமரை பஞ்சாயத்தை ஆரம்பித்தார்.
Recommended Video
மத்தவங்க தூங்காம பார்த்துக்கணும் எனும் பொறுப்பை எனக்கு தாமரை கொடுத்தா சார் அதனால் தான் நான் தூங்கி விட்டேன் என்பது போல ராஜு கிண்டலாக பேசியது தாமரையை மேலும் கடுப்பாகியது.
ராஜு காமெடியாக பேசுவான் சார் அவன் பேசினால் யாருமே வீட்டில் தூங்க மாட்டார்கள் என தாமரை சொல்ல கமல் சிரித்து விட்டார்.

செல்ல சண்டை
ராஜுவை தாமரை செல்விக்கும் தாமரையை ராஜுவுக்கும் பிடிக்கும் என்பது பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், தாமரையை மட்டம் தட்டி பேசுவது போல ராஜு விளையாடுவதும் ராஜுவை திட்டுவது போல செல்லமாக தாமரை சண்டை போடும் காட்சிகளையும் தொடர்ந்து காட்டி வருகின்றனர்.

தகுதியான கேப்டன் தாமரை
கேப்டனாகும் தகுதியே தாமரைக்கு இல்லை என பிரியங்கா பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், 16 மணி நேரம் கயிற்றை விடாமல் பிடித்துக் கொண்டு மன உறுதியுடன் இருந்த தாமரை இந்த வாரம் மீண்டும் கேப்டனாக செயல்பட்டார். அது குறித்து ஹவுஸ்மேட்களிடம் கமல் கேட்க அக்கா கொஞ்சம் சவுண்ட் பார்ட்டி தான் ஆனால், இந்த வாரம் சமயல் தெரியாதவர்களை குக்கிங் டீமில் போட்டு நல்ல உணவை சரியான நேரத்திற்கு கொடுத்து தகுதியான கேப்டன் என நிரூபித்து விட்டார் என அக்ஷரா புகழ்ந்து தள்ளினார்.

ராஜுவை போட்டுக் கொடுத்து
தாமரை கேப்டன்ஸி எப்படி இருந்தது என ஹவுஸ்மேட்களிடம் கேட்ட கமல் நீங்க சொல்றதை யாராவது கேட்காமல் இருந்தார்களா? என கேட்டதும் எல்லாருமே கேட்டாங்க சார் ஆனால், தம்பி ராஜு தான் கேட்க மாட்றான் என வசமாக மாட்டிவிட்டார் தாமரை.

கட்டாயப்படுத்தி காமெடி
தூங்குறவங்களை கண்காணிக்க என்னை சொன்னா சார்.. அதான் நானே தூங்கிட்டேன் என ராஜு சொல்ல தம்பி காமெடியா பேசுனா யாருமே தூங்க மாட்டாங்க சார்.. நான் கேப்டனா இருக்கப் போ நாய் குலைக்கும் சத்தம் கேட்க கூடாதுன்னு சொன்னேன் சார் என தாமரை சொல்ல கட்டாயப்படுத்தி காமெடி பண்ன சொல்றா சார் என பதிலுக்கு கமலிடம் தாமரையை போட்டுக் கொடுத்தார் ராஜு.

கமல் சமாளிஃபிகேஷன்
என்ன ரொம்ப லேகா போகுதேன்னு நினைத்த கமல் கட்டாயப்படுத்தி யாரையும் காமெடி பண்ண சொல்லக் கூடாது தாமரை கவுண்டமணியா அல்லது யார் என தெரியவில்லை திடீர்னு ஒரு காமெடி சொல்லுங்க என கேட்டதும், உங்களுக்கு நீச்சல் அடிக்க தெரியுமா? என பதிலுக்கு கேட்க அவரும் தெரியுமே என சொல்ல, எங்கே இங்கேயே நிச்சல் அடிங்க என கலாய்த்த கதையை சொல்லி அந்த டாப்பிக்கில் இருந்து வேறு டாப்பிக்கிற்கு செல்ல கமல் ரொம்பவே சமாளிஃபிகேஷன் செய்தார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











