தரமாக விளையாடும் தாமரை.. சர்வைவராக மாறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. செம புரமோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியா அல்லது சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியா என்கிற சந்தேகமே எழும் அளவுக்கு இந்த வாரம் தொடர்ந்து ஏகப்பட்ட பிசிக்கல் டாஸ்க் கொடுக்கப்பட்டு இதுவரை கலாய்த்து வந்த நெட்டிசன்களின் வாய்களை அடைத்துள்ளனர்.
கிராமத்து பெண் ஒன்றுமே தெரியாத அப்பாவி என அடையாளம் காணப்பட்ட தாமரை செல்வி முதல் வாரத்தில் பலூன் போட்டியில் வென்றது முதல் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெறாமல் தப்பிக்க போராடும் போராட்டம் வரை வேற லெவல்.
தற்போது வெளியாகி உள்ள பிக்பாஸ் புரமோ 3 ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடைசி 4 பேர்
சிபி, நிரூப் உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் வெற்றி பெற்று நாமினேஷனில் இருந்து வெளியேறி உள்ளனர். தொடர்ந்து பஸ் டாஸ்க், சாணி டாஸ்க், சாக்கு ரேஸ் என பிசிக்கல் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கடைசியாக ராஜு, அபிநய், அமீர் மற்றும் தாமரை போட்டி போட்டு வருகின்றனர்.

ஒரே பெண்
மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள பிரியங்கா, இளைஞர்கள் பட்டாளம் மொய்க்கும் பாவனி, எலைட் அக்ஷரா என பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 3 பெண் போட்டியாளர்களை தூக்கி சாப்பிட்டு விட்டு கடைசி வரை ஆண் போட்டியாளர்களுடன் கடும் போட்டி போட்டு கலக்கும் ஒரே பெண்ணாக தாமரை செல்வி உள்ளார். சொல்லில் மட்டுமல்ல செயலிலும் தான் கெட்டிக்காரி என்பதை தாமரை நிரூபித்துள்ளார்.

அபிநய் அட்டகாசம்
பாவனி பின்னாடியே போகிறார் என அபிநயை நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், பாவனியை விட ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கி கலக்கி வருகிறார். குயிஸ் டாஸ்க்கில் அனைத்து கேள்விகளுக்கும் அசத்தல் பதில் கொடுத்து அட்டகாசம் செய்தார். கடைசி வரை தொடர்ந்து போராடி வருகிறார்.

விடாத அமீர்
பஸ் டாஸ்க்கில் இருந்து பஸல் டாஸ்க் வரை அபிநய் போலவே அமீரும் கடும் போட்டி கொடுத்து கலக்கி வருகிறார். அமீர் மற்றும் அபிநய் பாவனி உடன் எந்தவொரு விவகாரத்திலும் சிக்காமல் விலகி இருந்தாலே இருவரும் அவர்களின் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ராக்கிங் ராஜு
ராஜு ஜெயமோகன் விளையாடாமல் வெறும் மிக்சர் மட்டுமே தின்று கொண்டு இருக்கிறார் என பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸே கலாய்க்க ஆரம்பித்தனர். சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்த ராஜு தன்னால் முடிந்த முயற்சியை போட்டு தொடர்ந்து போராடி வருவதை பார்த்த ராஜு ஆர்மியினர் இது போதும் ராஜு பாய் மத்ததை நாங்க பார்த்துக்குறோம் என டைட்டில் வின்னராக ராஜுவை மாற்றும் முயற்சியில் ஓட்டுக்களை குவித்து வருகின்றனர்.
Recommended Video

தாமரைக்கு கிடைக்குமா
இமான் அண்ணாச்சியை கடைசி வரை அழைத்து சொல்வேன் என ராஜு சொன்ன நிலையில், தனது முயற்சியால் ராஜு உடன் கடைசி வரை தாமரை ஃபைனல்ஸ்க்கு வருவாரா என்கிற எதிர்பார்ப்பும். இந்த சீசனில் ஒரு பெண் போட்டியாளர் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதால் பிரியங்காவை விட தாமரை சரியான ஆள் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் கிராண்ட் ஃபினாலேவில் அந்த டைட்டில் யாருக்கு கிடைக்கப் போகுது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











